பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி... செப்டம்பர் முழுக்க அப்டேட் தெறிக்கும்

சென்னை: தீபாவளி நாளில் பிகில் படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முழுக்க படத்தின் அப்டேட்கள் தெறிக்க விடப்படும் என்றும் பட நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமர்ஷியல் வெற்றி பெற்ற தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் "பிகில்". இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வட சென்னை தாதாவாக அப்பா கதாபாத்திரத்திலும், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக மகன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதால் இப்படம் பெண்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் ரசிகர்களை கவரும் வகையில் தற்போது பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை ஏ.ஜி.எஸ்.கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக், கதிர், தேவதர்ஷினி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிங்கபெண்ணே எனும் பாடல் படு ஹிட்டாகி உள்ளது. இப்பாடலை இதுவரையிலும் 1.35 கோடி பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாகவும், வேகமாகவும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி என இரண்டு நாட்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

பாடல் சாதனை

பாடல் சாதனை

இதில் ஒரு தேதியை முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இசை வெளியாவதற்கு முன்னரே யூடியூபில் பாடல் சாதனை படைத்துள்ளதால் விஜய் ரசிகர் மத்தியில் இப்படத்தின் இசையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வந்தது.

3 படங்கள் மோதல்

3 படங்கள் மோதல்

தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், 'பிகில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

தீபாவளி ரிலீஸ் உறுதி

இதனை அடுத்து 'பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி இந்த படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ' தி வெயிட் இஸ் ஓவர்' என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தளபதி தீபாவளி

தளபதி தீபாவளி

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாதி அட்டகாசமான 'பிகில்' திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் இருக்கும் இந்த புகைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பிகில் படத்தின் அப்டேட்டை தெறிக்கவிடப்போவதாகவும் கூறியுள்ளனர். இந்த தீபாவளி தளபதி தீபாவளியாக இருக்கும் என்று இப்போதே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X