பிகில் விஜய்க்கு டூப் போட்டவர் இவர்தான்.. லீக்கான ரகசியம்.. அஜித் ரசிகர்கள் கிண்டல்!
சென்னை: நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான பிகில் படத்தின் VFX பிரேக்டவுன் ஆகி உள்ளது.
Recommended Video
எந்தவொரு டபுள் ஆக்ஷன் படமாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் நடிகர்களுக்கு டூப் போடுவது வழக்கம்.
பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நபர் குறித்த தகவல் தற்போது போட்டோவுடன் கசிந்துள்ளது.

சினிமாவில் டூப்
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டே சண்டைக் காட்சிகளில் கதாநாயகர்களுக்கு டூப் போடுவது வழக்கம். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள், கண்ணாடியை உடைத்துக் கொண்டு குதிக்கும் காட்சிகள், மாடியில் இருந்து பல்டி அடிக்கும் காட்சிகள் என ரிஸ்க்கான காட்சிகளில் ஸ்டன்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து நடித்து வருகின்றனர். பல பேர் தங்களின் உயிரையும் கொடுத்துள்ளனர்.

ரஜினிக்கு டூப் போட்ட மனோஜ்
எந்திரன் படத்தில் சிட்டி ரோபாவுக்கு பிரபல நடிகர் மனோஜ் பாரதிராஜா டூப் போட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். வசீகரனாக ரஜினி காரில் அமர்ந்திருக்கும் காட்சியில், சிட்டி ரோபோவாக கார் ஓட்டியது மனோஜ் தான் என்ற சுவாரஸ்ய தகவல் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

டபுள் ஆக்ஷன் டு தசாவதாரம்
டபுள் ஆக்ஷன் முதல் தசாவதாரம் வரை நம்ம ஊர் நடிகர்கள் நடித்து தள்ளி உள்ளனர். தனித் தனி காட்சிகளில் அந்த நடிகர்களே நடித்து விடுவார்கள். ஒரே காட்சியில் இரு கதாபாத்திரங்களில் ஒரே நடிகரை என்ன மாயாஜாலம் பண்ணிய நடிக்க வைக்க முடியும். அதுபோன்ற நேரங்களில் டூப் பயன்படுத்தி டெக்னாலஜியின் உதவியுடன் பல படங்களில் இந்த வேலையை சினிமாவில் செய்து வருகின்றனர்.

பிகிலாக
ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அவர் அருகே அமர்ந்தும், அவரை கட்டித் தழுவியும் இன்னொரு விஜய் நடிக்கும் காட்சியில் நடித்த டூப் நடிகர் யார் என்ற ரகசியம் தற்போது கசிந்துள்ளது. ஸ்ரீராம் என்ற டூப் கலைஞர் தான் விஜய்யின் பிகில் கதாபாத்திரத்திற்காக டூப் போட்டு நடித்துள்ளார். பிகில் VFX பிரேக்டவுன் காட்சிகள் தற்போது கசிந்து வைரலாகி வருகின்றன.

அஜித் ரசிகர்கள் கிண்டல்
நடிகர் ஸ்ரீராம் என்ற ஐடியில் இந்த புகைப்படங்கள் தற்போது கசிந்துள்ளன. ஆனால், இது ஃபேக் ஐடி என்று சொல்லப்படுகிறது. பிகில் படத்தின் டூப் காட்சிகள் வெளியான நிலையில், வழக்கம் போல அஜித் ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்தும் நடிகர் விஜய்யை கிண்டல் செய்தும் வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே இதனால் குட்டி சண்டை ஒன்றும் உருவாகி இருக்கிறது.

மங்காத்தா பைக் ரேஸ்
முன்னதாக மங்காத்தா படத்தின் பைக் ரேஸ் காட்சியை தல அஜித் ஓட்டவில்லை என்றும், ஓட்டியது ஸ்டன்ட் மேன்களான நாங்கள் தான் என அபிஷேக் மற்றும் செந்தில் ஆகியோர் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். ஆனால், அதனை அஜித் ரசிகர்கள் நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











