15 வருடத்திற்கு பின் மீண்டும் ஒரு சாதனை.. பிகில் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்.. இன்னொரு கில்லி!
பிகில் படம் கில்லி படத்திற்கு அடுத்து தமிழில் விஜய்க்கு மிக சிறப்பான படமாக இருக்க போகிறது என்று விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.
Recommended Video
சென்னை: பிகில் படம் கில்லி படத்திற்கு அடுத்து தமிழில் விஜய்க்கு மிக சிறப்பான படமாக இருக்க போகிறது என்று விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் இன்று வெளியானது. பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக இன்று அதிகாலையில் பிகில் படம் வெளியானது.

நல்ல ரிவ்யூ
படம் காலையில் இருந்து நல்ல ரிவ்யூக்களை பெற்று வருகிறது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு முதலில் அவர்களின் ரசிகர்கள்தான் ரிவ்யூ எழுதுவார்கள். அதனால் பெரும்பாலும் அது தனிப்பட்ட நடிகரின் ரசிகருடைய கருத்தாக மட்டுமே இருக்கும். ஆனால் பிகில் படத்திற்கு எல்லோரும் நல்ல விமர்சனம் எழுதி வருகிறார்கள்.

கில்லி படம் எப்படி
விஜய் நடித்து வெளியான கில்லி படம், இப்போதும் கோலிவுட்டில் சூப்பர் ஹிட் படம். ரஜினிக்கு ஒரு பாட்சா போல விஜய்க்கு கில்லி படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடித்து இருந்தது.

இன்னொரு கில்லி
15 வருடங்களுக்கு பிறகு தற்போது பிகில் படமும் கில்லி போலவே செம திரில்லாக செல்கிறது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அலுப்பு தட்டாமல் படம் செல்கிறது. படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும். பல தரப்பிற்கும் இந்த படம் பிடிக்கும். விளையாட்டு காட்சிகள் மக்களை ஈர்க்கும் என்று கூறுகிறார்கள்.

சர்க்கார் படம்
விஜயின் கடைசி படமான சர்க்கார் பெரிய அளவில் பிளாப் ஆனது. அதில் இருந்து தற்போது பிகில் மூலம் விஜய் மீண்டும் வந்து இருக்கிறார். அவரின் கோலிவுட் கெரியரில் இந்த பிகில் படம் மிக முக்கியமான ஒன்றாக இருக்க போகிறது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











