ராயப்பன்தான் மாஸ்.. செஞ்சிட்டார்.. விஜய்க்கு கிடைத்த பெஸ்ட் ரோல்.. அப்ளாஸ் அள்ளும் பிகில்!
பிகில் படத்தில் விஜய் நடித்து இருக்கும் ராயப்பன் பாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் விஜய் நடித்து இருக்கும் ராயப்பன் பாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படம் வெளியாகி உள்ளது. தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிகில் இன்றே திரைக்கு வந்து இருக்கிறது.
காலையில் சிறப்பு காட்சி பார்த்தவர்கள் எல்லோரும் படம் பக்கா மாஸாக இருக்கிறது என்று விமர்சனம் எழுதி வருகிறார்கள். படத்தில் நிறைய சுவாரசியமான அம்சங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

இரண்டாம் பாதி எப்படி
இந்த படத்தில் முக்கியமான விஷயமே இரண்டாவது பாதிதான். இண்டர்வலுக்கு பின் வேகம் எடுக்கும் கதை, பெருங்களத்தூரை தாண்டிய ஆம்னி பேருந்து போல படு வேகத்தில் செல்கிறது. சீட் நுனியை விட்டு அகல முடியாத அளவிற்கு படத்தின் காட்சிகள் எல்லாம் தாறு மாறு!

பெண்கள் எப்படி
அதேபோல் படத்தில் விஜய் மட்டுமில்லாமல், கால்பந்து அணியில் வரும் பெண்கள் எல்லோருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள். முக்கியமாக விஜய் அவர்களுக்கு கிளாஸ் எடுப்பதும், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுவதும் மாஸ். எல்லோருக்கும் பெண்கள் குறித்த பார்வை இதனால் மாறும் என்கிறார்கள்.

பிஜிஎம் எப்படி
யாரும் எதிர்பார்க்காமல் எல்லோரையும் கவர்ந்தது, பிஜிஎம்தான் என்கிறார்கள். ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த பிஜிஎம்மை கொடுத்து இருக்கிறார். மூன்று ஹீரோ இன்ட்ரோ காட்சிகளுக்கும் சிறப்பாக தீம் மியூசிக் போட்டு கொடுத்துள்ளாராம்.

ராயப்பன் எப்படி
அதே சமயம் எல்லோருக்கும் இந்த படத்தில் பிடித்த ரோல் என்றால் அது ராயப்பன் ரோல்தான் என்கிறார்கள். விஜய்க்கு இந்த ரோல் கட்சிதமாக பொருந்தி இருக்கிறது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் பிகிலேலே என்று கத்தும் அளவிற்கு இருக்கிறது என்று கூறி உள்ளனர்.

வயது
விஜய்க்கு வயதான ரோல் செட்டாகாது என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி, விஜய் ராயப்பன் ரோலில் கலக்கி இருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரி எல்லாம் மரண மாஸாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவருக்கு கிடைத்த பெஸ்ட் ரோல் இதுதான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











