4 நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காது.. புக்கிங்கில் சாதனை படைக்கும் பிகில்.. கோலிவுட்டில் புதிய வரலாறு!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பிகில் படத்தின் புக்கிங் வேகமாக நிரம்பி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பிகில் படத்தின் புக்கிங் வேகமாக நிரம்பி உள்ளது.
பிகில் படம் வெளியாகி தற்போது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக பிகில் வெளியாகி உள்ளது.
தீபாவளி சமயத்தில் விஜய் ரசிகர்களுக்கு படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ரிவ்யூ எழுதி வருகிறார்கள். படம் காலையில் இருந்து நல்ல ரிவ்யூக்களை பெற்று வருகிறது.

புக்கிங் எப்படி
பிகில் படத்தின் புக்கிங் வேகமாக நிரம்பி வருகிறது. மல்டி பிளக்ஸ் அனைத்திலும் டிக்கெட் புக் செய்யப்பட்டுவிட்டது. பி மற்றும் சி செண்டர்களில் வேகமாக படம் நிரம்பி வருகிறது. விஜய் படங்களில் பெஸ்ட் ஓப்பனிங் கொண்ட படம் இதுதான் என்கிறார்கள்.

இல்லை
கோலிவுட்டில் இதற்கு முன் எந்த படத்திற்கும் இப்படி நடந்தது கிடையாது. எந்திரன் மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு வேகமாக புக்கிங் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவ்வளவு வேகமாக கோலிவுட்டில் சமீபத்தில் யாருக்கும் படம் புக் ஆனது இல்லை.

முடிந்தது
ஞாயிற்றுக்கிழமை ஷோ அனைத்தும் புக் ஆகிவிட்டது. திங்கள் கிழமையும் அரசு விடுமுறை என்பதால் அன்றைய ஷோவும் மொத்தமாக நிரம்பி இருக்கிறது. திங்கள் கிழமை இரவு காட்சி வரை படம் முழுமையாக புக் ஆகிவிட்டது.

எத்தனை காட்சிகள்
பிகில் படம் வேகமாக, நிரம்பி வருவதால் சில தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் போடப்பட்டு வருகிறது. மற்ற எல்லா படங்களையும் தூக்கிவிட்டு, பிகில் படத்திற்கும் மட்டும் கூடுதல் காட்சிகள் போடப்பட்டு வருகிறது. இதனால் கோலிவுட்டில் புதிய ஓப்பனிங் கிங்காக விஜய் உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











