பிகில் படம் வெற்றியா? தோல்வியா? பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு!
விஜய்யின் பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் பட ரிசல்ட் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாகிறது. இதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிகில் படத்தின் டீசர் ஏற்னகவே பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் அள்ளி குவித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிசல்ட் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு வெளியிட்டுள்ளார். பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும், என்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் எனவும் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார். மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் பிகில் பெரிய வெற்றியை தேடி தரும் என அவர் கூறியுள்ளார்.
விஜய், அட்லீ, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரி ஜாதகத்தை வைத்து இதனை கணித்ததாக பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை, நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து பாலாஜி ஹாசன் கூறிய ஜோதிடம் பெரும்பாலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











