பிகிலுக்கு இன்னொரு பெருமை.. எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்!
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் எகிப்து நாட்டில் நாளை ரிலீசாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தீபாவளி விருந்தாக வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் இந்தியளவில் வசூலில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ளியன்று வெளியான பிகில் திரைப்படம் திங்கட்கிழமை வரை 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 70 கோடி தாண்டியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ் கிங்
கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக நடிகர் விஜய் மாறியுள்ளார். தீபாவளியன்று இந்திய அளவில் வெளியான படங்களில் ஹவுஸ்ஃபுல் 4 மற்றும் சாந்த் கி ஆங்க் உள்ளிட்ட திரைப்படங்களை விட பிகில் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளதாம்.
உலகளவில் சுமார் 120 கோடி ரூபாய் வசூலை வெறும் நான்கு நாட்களில் பிகில் அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5ம் நாளான இன்றைய வசூலின் மூலம் தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூலை பிகில் செய்யவுள்ளதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

எல்லாம் யாரால?
அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பிகில் திரைப்படத்தில், நடிகர் விஜய் ராயப்பன், மைக்கேல் என இரண்டு ரோல்களில் நடித்திருந்தார். பிகில் திரைப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் பெண்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுவதுதானாம். சிங்கப்பெண்களின் எழுச்சி மற்றும் ஆர்வம் தான் படத்தை பிரம்மாண்ட வெற்றியடைய செய்துள்ளதாகவும், அட்லியின் சென்டிமென்ட் காட்சிகள் விமர்சகர்களை விட பெண்களை வெகுவாக ஈர்த்துள்ளதாம்.
முதல்முறை
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், நாளை அக்டோபர் 30ம் தேதி எகிப்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏபி இன்டர்நேஷனல் சார்பில் எகிப்தில் பிகில் திரைப்படம் வெளியாகிறது. இதுவரை எகிப்தில் எந்தவொரு தமிழ் படமும் வெளியாகாத நிலையில், முதல்முறையாக பிகில் திரைப்படம் எகிப்தில் வெளியாகவுள்ளது.

ரீமேக்
பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள சாதனையை தொடர்ந்து பாலிவுட் மற்றும் கன்னட மொழிகளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். பிகில் திரைப்பட உரிமைக்காக பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











