தடைகள் தகர்ந்தது.. திட்டமிட்டப்படி நாளை ரிலீசாகிறது விஜய்யின் பிகில்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக பிகில் திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி வெளியாகிறது.
சென்னை: பிகில் திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி வெளியாகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் பிகில். தீபாவளி பண்டிகையையொட்டி இத்திரைப்படத்தை நாளை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் பிகில் படத்திற்கு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் ரிலீசில் சிக்கல் நீடித்து வந்தது. உதவி இயக்குனர் செல்வா என்பவர் பிகில் படத்திற்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
இந்நிலையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் பிகில் கதைக்கு உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் தன்னுடை பிரேசில் எனும் கதையை தான் பிகில் படமாக அட்லீ எடுத்துள்ளதாகவும், இரு கதைகளையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு சட்டவல்லுநரை நியமிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும் தனக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் பக்க கோரிக்கைகளை எடுத்துரைத்தார். அதனை கேட்ட நீதிபதி, மனுதாரர் தனது ஆவணங்களை கையெழுத்து பிரதியாக இல்லாமல், கணினி அச்சுப் பிரிதியாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இரண்டு வழக்குகளிலும் பிகில் படத்தின் ரிலீசுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி பிகில் திரைப்படம் நாளை ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











