பிகில் 100வது நாள் கொண்டாட்டம்.. அர்ச்சனா ஹேப்பி ட்வீட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் புள்ளிங்கோ!

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பிகில்.

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் போட்டுள்ளார்.

ஃபுட்பால்ல செஞ்சுரி

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம் இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது. தளபதி விஜய், ராயப்பன், மைக்கேல் என இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மற்றொரு சிறப்பு தோற்றமாக மைக்கேல் விஜய், பிகிலாக ஃபுட்பால் ஆடிய காட்சிகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது.

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்

வில்லு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் பிகில் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. ஏஞ்சலாக திருமண உடையில் வரும் ஆரம்ப காட்சி முதல் சிங்கபெண்களை ஊக்கப்படுத்தும் சிங்கபெண்ணாக நயன்தாரா கடைசி வரை இருந்து அசத்தினார். அதிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் உனக்காக வாழ நினைக்கிறேன் பாடலில் எல்லாம் இரண்டு பேரோட கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது.

ஹாட்ரிக் அட்லீ

ஹாட்ரிக் அட்லீ

தெறி படத்தில் விஜய்யை போலீஸ் அதிகாரியாக காட்டிய அட்லீ, மெர்சல் படத்தில் மேஜிஷியன், டாக்டர், வெற்றிமாறன் என மூன்று ரோல்களில் காண்பித்து தளபதி ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக மாறியுள்ளார். தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறை பிகில் படத்தில் கை கோர்த்த அட்லீ, விஜய்யை ரவுடி ராயப்பனாகவும், ஃபுட் பால் சாம்பியன் பிகில் மற்றும் மாஸான மைக்கேல் என பக்கா கமர்ஷியல் விருந்தை தீபாவளிக்கு ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

Recommended Video

Bigil 50th day celebration | ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

அர்ச்சு அக்கா

விஜய்யுடன் படம் பண்ண ஆரம்பித்ததில் இருந்து அப்டேட்களை தவறாமல் சமூக வலைதளத்தில் கொடுத்து வந்து தளபதி ரசிகர்களின் ஃபேவரைட் தயாரிப்பாளராகவும் பாசமான அக்காவாகவும் மாறிவிட்டார். பிகில் படம் 100வது நாளை கடந்துள்ள நிலையில், ஸ்பெஷல் ட்வீட் ஒன்றை காலையிலேயே போட்டு தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

டிரெண்டிங்

அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டை தொடர்ந்து #Bigil100days என்ற ஹாஷ்டேக்கை தளபதி புள்ளிங்கோ வெறித்தனமாக தெறிக்கவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பிகில் ஹாஷ்டேக் ட்விட்டர் டாப் வரிசையில் இடம்பிடித்த நிலையில், இந்த ஆண்டு மாஸ்டர் ஹாஷ்டேக்கை அந்த இடத்திற்கு கொண்டு வரவும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.

300 கோடி

கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டியது பிகில் தான் என அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். பிகில் படம் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக வெளியான டிராக் ரிப்போர்ட்டுகளை வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் ஹேட்டர்ஸ் இது போலியான வசூல் நிலவரம் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X