பிகில் 75வது நாள் கொண்டாட்டம்.. மதுரையில் களைகட்டுது.. வெறித்தனமாக கொண்டாடும் புள்ளிங்கோ!
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் படம் தியேட்டர்களில் 80வது நாளை கடந்துள்ளது.
மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் தற்போது பிகில் படத்தின் 75வது நாளை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
#bigil75atmadurai என்ற ஹாஷ்டேக்கை காலை முதலே தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், வர்ஷா பொல்லம்மா, விவேக், யோகி பாபு என நட்சத்திர பட்டாளத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பிகில் படம் இன்னமும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அமேசான் பிரைம்
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக வெளியான பிகில் திரைப்படம் 50வது நாள் கொண்டாட்டத்தின் போதே அமேசான் பிரைமில் வெளியானது. அமேசானில் வெளியான போதிலும், தொடர்ந்து சில திரையரங்கில் பிகில் வெற்றிநடை போட்டு வருகிறது.

75ம் நாள் கொண்டாட்டம்
மதுரையில் உள்ள பிரபல தியேட்டரில் பிகில் படத்தின் 75ம் நாள் கொண்டாட்டம் மாஸ் காட்டியுள்ளது. தளபதி விஜய்யின் என்ட்ரி சீனுக்கு மதுரை புள்ளிங்கோ செய்யும் அட்டாகச வீடியோ வைரலாகி வருகிறது.
பிகில் 80வது நாள்
சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ் மதுரவாயல் திரையரங்கம் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் பிகில் படம் 80ம் நாளை கடந்து உள்ளது.
ஆல்டைம் பிளாக்பஸ்டர்
விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் விஜய் படங்களிலேயே ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 300 கோடிக்கும் மேலாக பிகில் வசூலித்துள்ளது. மதுரையில் பிகில் படத்தின் 75வது நாளை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி கோட்டை
தளபதி விஜய்யின் கோட்டை மதுரை என்றும், இது முதல் நாள் கொண்டாட்டம் அல்ல 75வது நாள் கொண்டாட்டம் என விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்து
மதுரையில் உள்ள ஜெயம் தியேட்டரில் தான் இந்த 75வது நாள் பிகில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ராயப்பன் என்ட்ரி
தளபதி விஜய்யின் மைக்கேல் என்ட்ரியை போல ராயப்பன் என்ட்ரியையும் ஸ்க்ரீனுக்கு அருகே சென்று ஆர்ப்பட்டம் செய்து ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
இன்னிக்கு இத்தனை ஸ்பெஷலா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் பல படங்கள் ஜனவரி 12ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. #13YearsOfIncarnationPokkiri, #11YearsOfVillu, #8YearsOfNanban, #3YearsOfBairavaa என பல ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்ய புள்ளிங்கோ காத்துக் கிடக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











