twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் வழக்கு.. 'தேவைப்பட்டால் நடிகை ரியாவை காவலில் எடுப்போம்..' பீகார் போலீஸ் அதிகாரி!

    By
    |

    மும்பை: தேவைப்பட்டால் சுஷாந்த் வழக்கில் நடிகை ரியாவை கைது செய்வோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    லைட்ஸ்.. கேமரா.. ஆக்ஷன்.. தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 ஷுட்டிங்.. பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ!லைட்ஸ்.. கேமரா.. ஆக்ஷன்.. தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 ஷுட்டிங்.. பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ!

    மன அழுத்தம்

    மன அழுத்தம்

    கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியானது. சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    சுஷாந்த் சிங் தந்தை

    சுஷாந்த் சிங் தந்தை

    நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    இது தொடர்பாக விசாரணை நடத்த பீகார் போலீசார், ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் மும்பை வந்துள்ளனர். அவர்கள், சுஷாந்த் வழக்கின் ஆவணங்களை மும்பை போலீசிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை. பீகார் போலீசாருக்கு அவர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ஒருங்கிணைப்பு இல்லை

    ஒருங்கிணைப்பு இல்லை

    இதுபற்றி போலீஸ் அதிகாரி வினய் திவாரி கூறும்போது, மும்பை போலீசாரிடம் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக, பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிக்கை, பல தரப்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை. பீகார் மற்றும் மும்பை போலீசார் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.

    கைது திட்டம் இல்லை

    கைது திட்டம் இல்லை

    அதனால்தான் நான் மும்பை வந்துள்ளேன். நான் எனது டீமுக்கு வழிகாட்ட இருக்கிறேன். நாங்கள் கடந்த சில நாட்களாக இந்த விசாரணையை தொடங்கியுள்ளோம். சரியான பாதையில் நாங்கள் செல்கிறோம். நடிகை ரியாவை கைது செய்யும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், தேவைப்பட்டால் காவலில் எடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Senior Bihar cop says Rhea Chakraborty will be taken into custody in Sushant Singh Rajput case ‘if need be’
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X