twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது.. பீகார் முதல்வரை இழுத்து விட்ட ரியா.. கொதித்தெழுந்த டிஜிபி

    |

    மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை இழுத்து விட்ட ரியா சக்கரவர்த்தியை கோபத்துடன் பீகார் டிஜிபி திட்டியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணையை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கங்கனா ரனாவத், கீர்த்தி சனோன், அங்கிதா லோகாண்டே, சுஷாந்த் சிங்கின் சகோதரி உள்ளிட்ட பல பிரபலங்கள், தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இதை பார்த்து வருகின்றனர்.

    65 நாளா எங்க இருந்தீங்க அக்ஷய்.. சிபிஐக்கு மாறிய சுஷாந்த் வழக்கு.. திடீர் ட்வீட்டால் எழுந்த கேள்வி65 நாளா எங்க இருந்தீங்க அக்ஷய்.. சிபிஐக்கு மாறிய சுஷாந்த் வழக்கு.. திடீர் ட்வீட்டால் எழுந்த கேள்வி

    மும்பை vs பீகார்

    மும்பை vs பீகார்

    மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை தற்கொலை என்று கூறி உடனடியாக முடிக்கும் முனைப்பில் மும்பை போலீஸ் அதிகாரிகள் செயல் பட்டனர் என்றும், அதனை எதிர்த்து, பீகார் காவல் நிலையத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது சுஷாந்த் தந்தை தொடுத்த வழக்கை விசாரிக்க மும்பை விரைந்த பீகார் போலீசாரை அலைக்கழித்தும் வந்தனர்.

    பேபி பென்குயின்

    பேபி பென்குயின்

    நடிகை ரியா சக்கரவர்த்தியை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மகாராஷ்ட்ரா அரசு பாலிவுட் மாஃபியாக்களின் கட்டளைக்கு கீழ் படிந்து எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் பேபி பென்குயின் ரியாவை மும்பை போலீசாரால் காப்பாற்றி வருவதால், சிபிஐக்கு வழக்கை மாற்ற பீகார் அரசு தீவிரம் காட்டியது.

    தோல்வியடைந்த ரியா

    தோல்வியடைந்த ரியா

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சிபிஐ வசம் செல்லாமல் இருக்க வேண்டும் என நடிகை ரியா சக்கரவர்த்தி மேற்கொண்ட பல முயற்சிகள் எல்லாம், கடைசியில் வீணாக போய்விட்டதாக, இன்று வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி பாலிவுட் ரசிகர்கள் பரிகாசம் செய்து வருகின்றனர்.

    பீகார் முதல்வர்

    பீகார் முதல்வர்

    நடிகை ரியா சக்கரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை வைத்து ஆதாயம் தேடுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் என்ற தகவலை தெரிவித்த பீகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே நடிகை ரியாவை கோபமாகவும் திட்டியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    அதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது

    அதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது

    ரியா சக்கரவர்த்தி தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், உணர்சி வசப்பட்டு கோபமாக கொந்தளித்த பீகார் டிஜிபி குப்தேஷ்வர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை இதில் இழுத்து விட உனக்கு எந்த தகுதியும் கிடையாது என திட்டி உள்ளார்.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்
    முதல்வர் நன்றி

    முதல்வர் நன்றி

    உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று தீர்ப்பை தான் வரவேற்பதாகவும், மக்கள் மற்றும் ரசிகர்கள் சிபிஐ விசாரணை மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

    English summary
    Rhea Chakraborty statement on Bihar CM Nitish Kumar seeking political interest in Sushant Singh death case makes Bihar DGP anger.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X