நயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்!
சென்னை: அனிருத் இசையில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ப்ரொமோ பாடல் வீடியோவில் பிஜிலி ரமேஷ் இடம்பெற்றுள்ளார்.
முன்பெல்லாம் ஒரு திரைப்பட வாய்ப்பு பெறவேண்டுமென்றால் ஒவ்வொரு புரொடொக்ஷன் கம்பெனியாக ஏறி இறங்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குனரின் பார்வையில் படும்படி தினமும் சலாம் போடவேண்டும் என்று கதை கதையாய் சொல்வார்கள். ஒருவர் நடிக்க வாய்ப்பு தேடிய கதையை வைத்து படமே எடுக்கலாம்.

ஆனால் நாம் டிஜிட்டல் இந்தியா என்று வந்த பிறகு அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. டப்ஸ்மாஷ் செய்தாலே டப்ளினில் அவார்ட் கொடுக்கிறார்கள். வரும் காலங்களில் ஒருவர் பதினைந்து நிமிடத்தில் பிரபலமாக முடியும் என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் அடுத்ததாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுப்பவர் யூட்யூப் பிரபலம் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான பஞ்ச் வசனங்களை யூட்யூபில் பேசியதன் மூலம் பிரபலமானார்.
பிஜிலி என்றால் இந்தியில் நெருப்பு என்று அர்த்தம்... நெருப்புடா... நெருங்குடா என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அறிமுகம் கொடுக்கும் பிஜிலி ரமேஷ், இப்போது கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ப்ரொமோ பாடலில் இடம்பெற்றுள்ளார். விரைவில் சினிமாவிலும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











