Bijili Ramesh Death: அதிர்ச்சி.. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

சென்னை: யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், குடிப்பழக்கத்தால் தனது உடல்நிலை மோசமடைந்ததாகவும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் பேட்டியளித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணிக்கு உயிரிழந்தது சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க் வீடியோ மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் இவருக்கு நடிகராக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், அமலாபால் நடித்த ஆடை மற்றும் ஜெயம் ரவி நடித்த கோமாளி, யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார்.

bijili ramesh death alcohol addiction

குடித்துவிட்டு சாலையில் சென்ற பிஜிலி ரமேஷை பிராங்க் செய்கிறோம் என பிடித்து கலாய்க்க தமிழ் சினிமாவுக்கு திடீரென ஒரு நடிகரே கிடைத்துவிட்டார். ஆனால், அதே குடி தற்போது அவரது வாழ்க்கையை பறித்துள்ளது.

பிஜிலி ரமேஷ் மரணம்: குடிபோதை தனது வாழ்க்கையையே மாற்றி விட்டது என்றும் யாரும் குடிக்காதீங்க என எழுந்துக் கூட நிற்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த பிஜிலி ரமேஷ் சமீபத்தில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது

உடலை உருக்குலைத்த குடிப்பழக்கம்: ஒரு இடத்தில் நிற்க மாட்டேன், சும்மா சுத்திக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் செய்த தவறுகள் அதிகம், அதிகம் குடித்ததன் விளைவாக தற்போது உடல் நலம் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னைப் பார்த்தாவது அந்த மோசமான குடிப்பழக்கத்தை மற்றவர்கள் விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என சமீபத்தில் அவர் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

கதறி அழும் குடும்பத்தினர்: நான் நல்லா இருந்த போது சினிமாவில் நடித்த போது என்னை சுற்றி தினமும் 40 நண்பர்கள் கூட இருந்தனர். ஆனால், இன்றைக்கு உடல் நலம் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது ஒருவன் கூட எட்டிப் பார்க்கவில்லை. உடம்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதைத் தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாகி கெடுத்துக் கொள்ளாதீர்கள் என பிஜிலி ரமேஷ் தன்னுடைய சோகமான நிலையிலும் அடுத்தவர்கள் யாரும் தன்னைப் போல பாதிக்கக் கூடாது என்பதற்காக அறிவுரை வழங்கி இருந்தார். எப்படியாவது சிகிச்சை பெற்று அவர் பிழைத்து விடுவார் என நினைத்த அவரது குடும்பத்தினர் தற்போது அவரது மறைவால் கதறியழுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X