எதையுமே சேர்த்து வைக்கலனு சொல்றாங்க.. ஆனா உண்மை வேற.. பிஜிலி ரமேஷின் சோக கதை தெரியுமா?
சென்னை: ஒரு பிராங்க் ஷோ மூலம் வெகு பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துக்குரிய நபராக மாறினார் ரமேஷ். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். தற்போது அவர் கொடுத்திருக்கும் பேட்டி பலரையும் கலங்க செய்திருக்கிறது.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி; சினிமாவில் அறிமுகமாகி; அதில் கடுமையாக உழைத்தால்தான் நடக்கும். ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் பெருகிவிட்டதால் அதன் மூலமே பிரபலமானவர்கள் தற்போது ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயமும்கூட.

செம லிஸ்ட்: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றார்கள். ஜிபி முத்து, காத்து கருப்பு கலை என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இவர்களில் காத்து கருப்பு கலை மட்டும் டபுள் மீனிங்காக பேசி வீடியோக்கள் போட்டுக்கொண்டிருந்தார். அது கண்டனத்தை சம்பாதித்தது. அதனையடுத்து அப்படி செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்திருக்கிறார். ஜிபி முத்துவை பற்றி சொல்லவே வேண்டாம்; டிக் டாக்கில் பிரபலமாகி பிக்பாஸில் கலந்துகொள்ளும் அளவுக்கு சென்றார். மேலும் சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பிஜிலி ரமேஷ்: அப்படி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் பிஜிலி ரமேஷ். தனியார் யூட்யூப் சேனல் ஒன்று பொதுமக்களை பிராங்க் செய்வதை வழக்கமாக வைத்திருந்தது. அப்படி அவர்கள் சராசரியாக பிராங்க் செய்ததுதான் பிஜிலி ரமேஷ். அதில் அவர் பேசிய விதம், அவரது நடவடிக்கைகள் அனைத்துமே சமூக வலைதளவாசிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனால் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார் ரமேஷ்.
பட வாய்ப்புகள்: பிரபலமாகிவிட்ட பிஜிலி ரமேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாகவே பிஜிலி ரமேஷ் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.
ரமேஷ் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் மனம் நொந்து ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமாவில் நான் லட்சக்கணக்கில் சம்பாதித்தது போல் பேசுகிறார்கள். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 13 ஆயிரம் ரூபாய் வாங்கினேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக 15,000 ரூபாய் வாங்கினேன். கோலமாவு கோகிலா படத்துக்கு ப்ரோமோ கொடுத்தேன். அதற்காக 20,000 ரூபாய் சம்பளமாக வாங்கினேன்.
என்னத்த சேர்த்து வைக்க முடியும்: அதேபோல் இன்னும் சில படங்களுக்கு 3,000 அல்லது 5,000 ரூபாய்தான் வாங்கினேன். அதிலும் 2 நாட்களுக்குத்தான் வேலை இருக்கும். இதில் பெரிதாக சம்பாதித்துவிட முடியும். சம்பாதித்ததை எல்லாம் சேர்த்து வைக்காமல் நான் குடித்துவிட்டு அழித்துவிட்டேன் என்று சொல்கிறார். ஆனால் நான் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. இதில் என்ன சேர்த்து வைக்க முடியும்” என்றார் சோகமாக.


Click it and Unblock the Notifications











