பைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh
சென்னை: தனக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தில் தானம் செய்துள்ளார் பிஜிலி ரமேஷ்.
அது யாரு அந்த பிஜிலி ரமேஷ் என்று நீங்கள் கேட்கலாம். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் அவர். ஃபேஸ்புக், ட்விட்டரில் ரஜினி டிரெண்ட் ஆகிறாரோ இல்லையோ பிஜிலி ரமேஷ் டிரெண்ட் ஆகிறார்.
அந்த அளவுக்கு பிஜிலி பெரிய ஆளா என்று கேட்பவர்களுக்கு அவரை பற்றி ஒரு குட்டி அறிமுகம் அளிக்கிறோம்.

வைரல்
பிரபல யூடியூப் சேனல் ஒன்று ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷை வைத்து கலாய்த்து வீடியோ எடுத்து வெளியிட்டது. அந்த வீடியோ வைரலாகி பட்டி தொட்டி எல்லாம் பிஜிலி ரமேஷ் பிரபலமாகிவிட்டார். பிஜிலி என்றாலே பிஜிலி ரமேஷ் என்று சொல்லும் அளவுக்கு மனிதர் பிரபலமாகிவிட்டார்.

ஆர்மி
யாஷிகாவுக்கு மட்டும் இல்லீங்க பிஜிலிக்கும் ஆர்மி உள்ளது. ஃபேஸ்புக்கில் பிஜிலி ரமேஷ் ஃபேன்ஸ், பிஜிலி ரமேஷ் ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டிலுமே தலா 43 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
கஷ்டம்
கூலி வேலை செய்யும் பிஜிலி தனது மகனின் கல்விச் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் ரஜினி ரசிகர் ஒருவர் அவருக்கு பணம் கொடுத்தார். பள்ளி கட்டணம் செலுத்தியது போக மீதி இருந்த பணத்தை தானம் செய்துள்ளார் பிஜிலி.
பிஜிலி
பிஜிலி ரமேஷ் ஒரு பைக் ஷோரூமை திறந்து வைத்துள்ளார். நடிகர்கள், நடிகைகளை வைத்து கடை திறக்கும் நிலையில் பிஜிலியை அழைத்துள்ளார்கள் என்றால் அவர் எவ்வளவு பிரபலம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரஜினி
ரஜினியின் கை கொடுக்கும் கை படத்தை பார்த்துவிட்டு பிஜிலி பார்வையில்லாத பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த ரசிகர் பிஜிலி இல்லையாம்.


Click it and Unblock the Notifications











