நீ விக்கிற.. நான் குடிக்கிறேன்.. டிரெண்டாகும் பிஜிலி ரமேஷின் பிராங்க் வீடியோ.. ரசிகர்கள் இரங்கல்!

சென்னை: குடிபோதையால் பல நடிகர்கள் கல்லீரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி பலியாகி வரும் சூழ்நிலை சினிமா உலகினரை கலங்கடித்து வருகிறது. பிளாக்‌ஷீப் டீம் போட்ட ஒரே ஒரு பிராங்க் வீடியோ ஒருவரை சினிமா நடிகராக்க முடியுமா? என்றால் முடியும் என்பதற்கு ஆதாரமாக மாறியவர் தான் பிஜிலி ரமேஷ்.

யூடியூப் சேனலில் நடித்து பலர் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும், நடிகைகளாகவும் மாறி வருகின்றனர். ஒரு யூடியூப் சேனலில் தலைக் காட்டிய ஒருவர் இப்படி சினிமாவில் பிரபலம் ஆனது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

bijili ramesh death alcohol addiction

சினிமாவுக்கு வரக் காரணமாக இருந்த குடிப் பழக்கமே அவரை சீக்கிரம் உயிரிழக்கவும் செய்து விட்டது தான் காலக்கொடுமை என ரசிகர்கள் அவரது வீடியோக்களை ஷேர் செய்து #BijiliRamesh ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நீ விக்கிற.. நான் குடிக்கிற: விஜே சித்து பிளாக்‌ஷீப் சேனலில் நடத்திய பிராங்க் வீடியோவில் வசமாக சிக்கிய பிஜிலி ரமேஷ் அந்த வீடியோவையே யூடியூப் டிரெண்டாக மாற்றும் அளவுக்கு பேசினார். அந்த வீடியோ டிரெண்டான நிலையில், யூடியூபர்களை வைத்து மீசையை முறுக்கு படத்தை இயக்கிய ஹிப் ஹாப் ஆதி தமிழா தனது அடுத்த படமான நட்பே துணை படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த பிராங்க் வீடியோவில், இதுதான் தவறான விஷயம் என்றும், பப்ளிக்க மடக்குற என்றும் நீ மது விக்கிற.. நான் குடிக்கிற என பேசியிருப்பார் பிஜிலி ரமேஷ்.

ரசிகர்கள் இரங்கல்: குடிகாரர்களை ஏன் திட்டுறீங்க, ஒரு குடிகாரர் எப்படி சினிமா வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளார் பாருங்க என நெட்டிசன்கள் பிஜிலி ரமேஷை டிரெண்ட் செய்த நிலையில், தற்போது குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 மாதங்களாக வீட்டில் முடங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடைசியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் மிகவும் இளைத்துப் போய் வெறும் 45 கிலோவாக மாறியது. தான் கஷ்டப்படுவதையும் குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது பிராங்க் வீடியோக்களையும் படங்களில் அவர் நடித்த காட்சிகளையும் ஷேர் செய்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், மது போதைக்கு யாரும் அடிமையாகிவிடாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X