அந்த மனசுதான் சார் கடவுள்.. 5 வருஷத்துக்கு பின் வெளியான அஜித்தின் செம வீடியோ.. ஏன் இந்த சீக்ரெட்?
நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் 5 வருடங்களுக்கு பிறகு வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் 5 வருடங்களுக்கு பிறகு வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் நிறைய தனித்திறமைகளை கொண்டவர். நன்றாக புகைப்படம் எடுப்பார், நன்றாக துப்பாக்கி சுடுவார்.
அதேபோல் இவருக்கு டிரோன் ரக ஏரோபிளேன்களை தயாரிக்க பிடிக்கும். மிக முக்கியமாக இவர் பைலட் லைசன்ஸ் வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி
இதெல்லாம் போக அஜித்திற்கு இருக்கும் முக்கியமான திறமை கார் மற்றும் பைக் ஓட்டுவது. இவர் பார்முலா ரக ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போட்டிகளில் அவருக்கு சில மோசமான விபத்துகளும் நிகழ்ந்துள்ளது.

இப்போது என்ன
இந்த நிலையில் நடிகர் அஜித் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு இந்த வீடியோ வெளியாகி உள்ளது. நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

என்ன பேசினார்
தான் புதிதாக வாங்கிய பைக்கை அலிஷா அப்துல்லா நடிகர் அஜித்திடம் காண்பித்துள்ளார். நடிகர் அஜித் அந்த பைக்கை ஓட்டி பார்த்துவிட்டு ''ஆல் தி பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க.. பாதுகாப்பாக ஓட்டுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர்
இந்த வீடியோவை வெளியிட்ட அலிஷா. எனக்கு அவரை சிறு வயதில் இருந்து தெரியும். அவர் என்னுடைய சூப்பர் பைக்கை ஓட்டிவிட்டு, என்னை வாழ்த்தினார், என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையம் முழுக்க வைரல்
இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. ஏன் மேடம் நீங்கள் இந்த வீடியோவை 5 வருடமாக ரகசியமா வைத்து இருந்தீங்க என்று சிலர் அலிஷாவிடம் கேட்டுள்ளனர். சிலர் அஜித், என்ன மனுஷன்ய்யா இவர் என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











