ஆத்தாடி.. மிரட்டுறாரு டிடிஎஃப் வாசன்.. ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசனின் இரண்டாவது படமான ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் டிடிஎஃப் வாசன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஐபிஎல் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இதுகிரிக்கெட் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

Bike rider ttf vasan ipl movie second poster released

டிடிஎப் வாசன்: இவர் கடந்த ஆண்டு பைக்கை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கியதை அடுத்து, பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களின் தனது யூடியூப் சேனல்வாசிகளை குஷிப்படுத்துவதற்காக கேமிராவை எடுத்துக்கொண்டு காரில் ஊர் சுற்றி வருகிறார். கடந்த மாதம், மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாவே முடிந்து வருகிறது. இருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இரண்டாவது போஸ்டர்: இந்நிலையில், டிடி எப் வாசன் ஏற்கனவே மஞ்சள் வீரர் படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார். பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிஷோர் நிற்க அவருக்கு பின் டிடிஎப் வாசன் முரட்டுத்தனமான லுக்குடன் இருக்கிறார். ரோட்டில் ஒரு கார் தனியாக நிற்கிறது. இப்படத்திற்கு ஐபிஎல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாக இது இருக்கும் என்று எதிர்பார்த்த நிரைலயில், தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் கார் இருப்பதால், இது கார் ரேஸ் சம்மந்தமான படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் திறமையான நடிப்புக்கு பெயர் போன நடிகர் கிஷோர் நடிக்க உள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

Bike rider ttf vasan ipl movie second poster released

குக்வித் கோமாளி: டிடி எப் வாசனின் காதலி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன்5ல் போட்டியாளராக உள்ளார். அந்த நிகழ்ச்சியில் விதவிதமாக சமைத்து அவர் அசத்தி வருகிறார். அவரின் அழகான தமிழை கேட்பதற்கு என்றே தனி கூட்டம் ஒன்று இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎப் வாசன் கலந்து கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X