விபத்தில் சிக்கிய டி.டி.எஃப். வாசன்.. நடுரோட்டில் சிதறி தெறித்த பைக்.. மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: பிரபல பைக் ரைடர் டி.டி.எஃப். வாசன் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபமடைந்தார்.

மேலும் இவர், அதிவேகத்தில் பைக் ஒட்டுவது, வீலிங் செய்வது என இளைஞர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாக பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மஞ்சள் வீரன்: டிடிஎஃப் வாசன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக மஞ்சள் வீரன் படத்தில் அறிமுகமாக உள்ளார்.இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது.
பைக்கில் வீலிங்: இந்நிலையில், டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எப். வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது பைக்கில் வீலிங் செய்ய முயற்சித்தார்.
நடுரோட்டில் குட்டிக்கரணம்: அப்போது, அதிவேகமாக பைக் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதால், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் குட்டிக்கரணம் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட டி.டி.எப். வாசன் சாலையோரம் இருந்த புதரில் விழுந்தார்.
மருத்துவமனையில் டி.டி.எப்: விபத்தை நேரில் பார்த்து பதறப்போன அக்கம்பக்கத்தினர் டி.டி.எப். வாசன் மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கவலையில் ரசிகர்கள்: டி.டி.எப். வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அவரது பேன்ஸ் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும் அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் இப்படி ஒரு விபத்தில் சிக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











