ஹவாய் பீச்சில் பிகினியில் சுற்றிய ஹீரோயின்.. வைரலாகும் த்ரோபேக் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகாஸ்!
சென்னை: பிரபல நடிகை ஹாவாய் தீவில் எடுத்த பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழில், பிஜோய் நம்பியார் இயக்கிய அந்தாலஜி படமான, 'சோலோ'வில் நடித்தவர் இந்தி நடிகை நேகா சர்மா.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். பரபரப்பாக புகைப்படங்களை போஸ்ட் செய்துகொண்டே இருப்பார்.

யங்கிஸ்தான்
தெலுங்கில், ராம் சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியில் யங்கிஸ்தான், முபாரகன், தன்ஹாஜி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சகோதரி ஐசா சர்மாவும் நடிகைதான். இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

அக்காவும் தங்கையும்
அடிக்கடி இன்ஸ்டாவில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நேகாவும் அவர் சகோதரியும் இதற்காகவே போட்டோஷூட் நடத்துகின்றனர். கொரோனா லாக்டவுன் நேரத்தில், இருவரும் பதிவிட்ட ஒர்க் அவுட் உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இன்ஸ்டாவை ரணகளப்படுத்தின.

கோவா ரிசார்ட்
அதை தொடர்ந்து செய்து வருகிறார் நேகா சர்மா. அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் வைரலாயின. அதற்கு ரசிகர்களும் தாறுமாறாக கமென்ட்களை தெளித்திருந்தனர். சமீபத்தில் கோவாவுக்கு சென்றிருந்த அவர்கள் அங்குள்ள ரிசார்ட்டில் இருந்து வீடியோ மற்றும் போட்டோவை பதிவிட்டு வந்தனர்.

த்ரோபேக் பிகினி
இந்நிலையில் இப்போது த்ரோபேக் பிகினி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நேகா சர்மா. அந்த போட்டோ அவர் ஹவாய் தீவுக்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாம். இந்த போட்டோவுக்கும் ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமென்ட்களையும் அள்ளிக் குவித்துள்ளனர்.

வெட்கப்படும் அளவு
சிலர், சான்ஸே இல்லை, நீங்க வேற லெவல் பியூட்டி என்று அவரை வர்ணித்துள்ளனர். பல நெட்டிசன்ஸ், மானே, தேனே என ஆரம்பித்து, உங்களை போல அழகு இந்த உலகத்துலயே இல்லை என அவரே வெட்கப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
Recommended Video

சுற்றிப் பார்க்கவா
ஹவாய்க்கு ஷூட்டிங் போயிருந்தீங்களா? சும்மா சுற்றிப் பார்க்கவா என சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். பிகினி உங்களுக்கு பக்காவா பொருந்துது என சிலர் கூறியுள்ளனர். ஒருவர் ஹவாய் சுந்தரியா? தமிழ்ல அடுத்து எப்ப நடிக்க போறீங்க என கேட்டுள்ளார். நேகா சர்மாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











