பிகினி அணியக் கூடாதுன்னு சொல்ல கணவர் யார்?: வாரிசு நடிகை பொளேர்
மும்பை: நான் பிகினி அணியக் கூடாது என்று சொல்ல சயிப் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரையும், அவரின் கணவரும், நடிகருமான சயிப் அலி கானையும் சேர்த்து விளாசுகிறார்கள்.
என்னய்யா புருஷன் நீங்க, பொண்டாட்டி இப்படி பிகினியில் சுத்துது என்று சயிபை கிண்டல் செய்கிறார்கள்.

கரீனா
நடிகர் அர்பாஸ் கான் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரீனா தனது கணவரை திட்டி ஒருவர் போட்ட கமெண்ட்டை சத்தமாக படித்தார் அவர். அதன் பிறகு அவர் தக்க பதிலடி கொடுத்தார்.

சயிப்
என்னை பிகினி அணியக் கூடாது என்று சொல்ல சயிப் யார்? நீ ஏன் பிகினி அணிகிறாய், நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று சயிப் ஒருபோதும் கூற மாட்டார். எங்களுக்கு இடையே அத்தகைய நம்பிக்கையான உறவு உள்ளது என்று தெரிவித்துள்ளார் கரீனா.

நீச்சல்
நான் பிகினி அணிகிறேன் என்றால் கண்டிப்பாக காரணம் இருக்கும். நீரில் இறங்கும்போது பிகினி தானே அணிய முடியும்?. இதற்கு எதற்காக என் கணவர் சயிப் கோபப்படப் போகிறார் என்று கரீனா கபூர் கூறியுள்ளார்.

தைமூர்
சயிப் அலி கான், கரீனா கபூருக்கு கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் ஆனது. அவர்களுக்கு இரண்டு வயதில் தைமூர் அலி கான் என்று மகன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











