இங்க இப்படி பேசிட்டு வெளிநாட்டுல அப்படி அணியறது சரிதானா..? 'பிகினி' கஸ்தூரியை விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பிகினி போட்டோவுக்கு ரசிகர்கள் கண்டபடி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் பாதிப்புக்கு 2,872 பேர் இதுவரை இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரத்து 109 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 946 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

லாக்டவுன்
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அவர்கள் தங்கள் புகைப்படங்களையும் சமையல் செய்யும் வீடியோக்களையும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

த்ரோபேக் போட்டோ
சிலர், தங்களது பழைய புகைப்படங்களை த்ரோபேக் படங்கள் என்று வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பழைய த்ரோபேக் பீச் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 'அந்த வருடத்தில் இதே நாள்' என்று 2016 ஆம் ஆண்டு அவர் கோஸ்டோரிகா கடலில் குளிக்கும் போட்டோவையும் பீச்சில் பிகினியில் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

மோசமான போட்டோகிராபி
இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'மோசமான போட்டோகிராபி. அது உங்களை போகஸ் பண்ணவே இல்லை' என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொருவர், கோஸ்டாரிகா தனித்துவமான நாடு. தெருக்களுக்குப் பெயர் கிடையாது, மிலிட்டரி இல்லை, எங்கும் பசுமையாகக் காட்சியளிக்கும், பயங்கரமான பாம்புகள் உண்டு' என்று தெரிவித்துள்ளார்.

அணிவது சரியா?
அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, வெப்பமண்டல சொர்க்கம் என்று கூறியுள்ளார். மற்றொருவர், 'எங்கள் நாட்டில் தமிழ் பேசிவிட்டு வெளிநாடுகளில் இது போன்ற உடையை அணிவது சரியா?' என்று விளாசியுள்ளார். 'இப்போ இந்த போஸ்ட் தேவைதானா?' என்று சிலர் கோபமாக கூறியுள்ளனர். இன்னொருவர், இந்த வயசுல இது தேவையா? என்று கேட்டிருக்கிறார். சிலர், பிகினி போட்டோவை குளோசப்ல போட்டிருக்கலாமே என்று கூறியுள்ளனர்.

கமலின் இந்தியன்
நடிகை கஸ்தூரி, 'ஆத்தா உன் கோவிலிலே' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி, சமீபகாலமாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிரடி கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











