எஸ்கேவை வீணடித்த அனுதீப்.. தெலுங்கு இயக்குநர்களை நம்பும் நடிகர்கள்.. வாரிசு, வாத்தி என்ன ஆகும்?

சென்னை: ஏகப்பட்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்க டோலிவுட் மார்க்கெட்டை பிடிக்கப் போகிறேன் என்கிற முனைப்புடன் பைலிங்குவல் படத்தில் நடிக்க கோலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தி மார்க்கெட்டை பிடிக்க சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு லைகர் படம் பலத்த அடியை கொடுத்தது. டோலிவுட் இயக்குநர்களை தாண்டி பாலிவுட் இயக்குநர்கள் படத்தில் நடித்த பிரபாஸுக்கும் அதே நிலைமை தான்.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் கதையை க்ரிப்பாக கொடுக்காமல் சிவகார்த்திகேயனை அனுதீப் வீணடித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு அடுத்த இரு படங்களின் நிலை என்ன ஆகும் என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

பைலிங்குவல் மோகம்

பைலிங்குவல் மோகம்

கலைக்கு மொழி கிடையாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதும் உண்மை தான். பைலிங்குவல் படம் பண்ண வேண்டும் என்றால், இரு மொழி ரசிகர்களையும் அந்த கதை கவர வேண்டும், அதற்கான தேவை இருக்க வேண்டும். வெறும் சினிமா மார்க்கெட்டை மட்டுமே மையமாக வைத்து படங்கள் உருவாகினால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்காது.

வீணடித்த அனுதீப்

வீணடித்த அனுதீப்

ஜதி ரத்னலு படத்தை தொடர்ந்து சமீபத்தில் அனுதீப் கதையில் வெளியான தெலுங்கு படமே ஃபிளாப் ஆன நிலையில், பிரின்ஸ் படத்துக்கு டோலிவுட்டிலும் எந்தவொரு வரவேற்பும் இல்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், பிரின்ஸ் படம் வெளியாகி உள்ள நிலையில், சிவகார்த்திகேயனையும் அனுதீப் வீணடித்து விட்டார் என எஸ்கே ரசிகர்களே திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் சிந்திப்பாரா

சிவகார்த்திகேயன் சிந்திப்பாரா

மிஸ்டர் லோக்கல், சீமராஜா என வரிசையாக படங்கள் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், டாக்டர், டான் என அடுத்தடுத்த 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து தேவையில்லாத சிக்கலை சந்தித்துள்ளார். 100 கோடி நாயகன் என்கிற தனது பெயரையும் தனக்கு இருக்கும் ரசிகர்களையும் தக்க வைக்க அடுத்தடுத்த படங்களை பார்த்து பண்ணுவாரா என்கிற கேள்வியும், சிந்தித்து செயல்படுங்கள் சிவகார்த்திகேயன் என்கிற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

மாவீரன் காப்பாற்றும்

மாவீரன் காப்பாற்றும்

பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றாலும், அடுத்ததாக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து வரும் மாவீரன் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியாக மாறும் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உறுதியுடன் உள்ளனர். பிரின்ஸ் படம் அழுத்தமான கதை இல்லை என்றாலும், பார்க்க ஜாலியாகத்தான் இருக்கிறது போர் அடிக்கவில்லை என்றும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

வாத்தி வொர்க்கவுட் ஆகுமா

வாத்தி வொர்க்கவுட் ஆகுமா

மிஸ்டர் மஜ்னு, ரங் தே, தோழி பிரேமா உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பைலிங்குவல் படமான வாத்தி வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்துடன் மோதிய நானே வருவேன் படம் சொதப்பிய நிலையில், வாத்தி தனுஷுக்கு கைகொடுக்குமா? வெங்கி அட்லுரி இரு மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்துவாரா என்றும் சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன.

வாரிசு என்னவாகும்

வாரிசு என்னவாகும்

அதே போன்ற ஒரு கேள்வி தான் விஜய்யின் வாரிசு படத்துக்கும் எழுந்துள்ளது. அந்த படத்தையும் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். ஆனால், ஏற்கனவே தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த வம்சி நிச்சயம் வாரிசு படத்தை சொதப்ப மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேமிலி டிராமாவாக உருவாகி வரும் வாரிசு படத்துக்கு தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், டோலிவுட்டில் பிரபாஸின் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் போட்டியாக களமிறங்குகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டி விஜய் பொங்கல் போட்டியில் வெற்றி பெறுவாரா? அதற்கு வம்சியின் இயக்கம் எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X