68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை... ஷாக்கில் ரசிகர்கள்!
பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ், நடிகர் பில் முர்ரேயை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ், ஹாலிவுட் நடிகர் பில் முர்ரேயை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாப் இசை பாடகியும், இளம் நடிகையுமான செலினா கோம்ஸ்க்கு ரசிகர்கள் ஏராளம். அடிக்கடி இவரது காதல் செய்திகள் இணையத்தில் உலா வருவதுண்டு. பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாகக் கூட செய்திகள் வந்தது.
இந்நிலையில், தற்போது இவர் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் காதலிப்பது வேறு யாரையுமல்ல, தற்போது 68 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் பில் முர்ரேயைத் தான்.

கேன்ஸ் திரைப்பட விழா:
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பில் முர்ரேவுடன் தான் செலினா வந்திருந்தார். அப்போதே இது தொடர்பான யூகங்கள் உலா வந்தது. அதனைத் தொடர்ந்து தனது காதலை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் செலினா.

விரைவில் திருமணம்:
அதோடு விரைவில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். செலினாவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிஜமாகவே அவர் பில் முர்ரேவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா இல்லை காமெடிக்காக அப்படிச் சொன்னாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

73லட்சம் பேர்:
இந்தப் பதிவோடு கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அவற்றை இதுவரை சுமார் 73 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சுமார் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். அதில், காமெடி செய்யாதீர்கள் என்று சிலரும், சில ரசிகர்கள் செலினா கோம்ஸ் பதிவு கோபத்தை வரை வைக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.
பாப் பாடல்:
தற்போது டெட் டோண்ட் டைய் (dead dont die) என்ற படத்தில் நடித்து வருகிறார் செலினா. அதோடு, இவர் பாடிய பாப் பாடல் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது. செலினாவிற்கு தற்போது 26 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications