அஜித்தின் பில்லா பட இயக்குனரின் முதல் பாலிவுட் படம் ஓடிடியில் வெளியாகிறது!

மும்பை : அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவார் என்பது பலரும் அறிந்ததே.

அந்த வகையில் பில்லா என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார்.

இப்பொழுது விஷ்ணுவர்த்தன் பாலிவுட்டில் இயக்கியிருக்கும் முதல் திரைப்படமே ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

அஜித்தை செம ஸ்டைலிஷாக

அஜித்தை செம ஸ்டைலிஷாக

குறும்பு என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற திரைப்படங்கள் கேங்ஸ்டர் கதையில் உருவாகியிருக்க அதுவும் செம ஹிட் அடித்தது. அப்போது தொடர்ந்து சரிவை சந்தித்து கொண்டிருந்த அஜித்துடன் இணைந்து பில்லா என்ற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். பில்லாவில் அஜித்தை வேற லெவலில் செம ஸ்டைலிஷாக காட்டியிருப்பார். இந்தப் படம் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆரம்பம்

ஆரம்பம்

நடிகர் அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பது பலரும் அறிந்ததே . அவ்வாறு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்த பில்லா படம் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஆரம்பம் என்ற படத்திலும் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணி இணைந்து மற்றுமொரு வெற்றி படத்தை கொடுத்தனர் . அதன் பிறகு மீண்டும் இணைய இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்தாலும் அது கைகூடவில்லை.

ஓடிடி பக்கம்

ஓடிடி பக்கம்

தமிழில் கடைசியாக யட்சன் என்ற படத்தை இயக்கி இதில் இவரது தம்பியும் நடிகருமான கிருஷ்ணா, ஆர்யா ஹீரோவாக நடித்து இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே ஓடிடி பக்கம் திரும்பி ஃபிங்கர்டிப் என்ற வெப்சீரிஸை இயக்கினார் அதுவும் கை கொடுக்கவில்லை. அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்தவர் இப்பொழுது பாலிவுட்டில் கால் தடத்தை பதித்துள்ளார்.

ஷெர்ஷா

ஷெர்ஷா

கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷெர்ஷா என்ற படத்தை இயக்கி உள்ளார். இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து சென்ற ஆண்டே வெளியாக இருந்த ஷெர்ஷா கொரோனா பரவல் காரணமாக வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டது .

ஆகஸ்ட் 15ஆம் தேதி

ஆகஸ்ட் 15ஆம் தேதி

இன்றுவரை திரையரங்குகள் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்பதால் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரபல முன்னணி ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாக உள்ளது. விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படமே ஊட்டியில் வெளியாகிறது. நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இப்படம் தயாராகி உள்ளதால் சுதந்திர தினத்தன்று வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X