தமிழகத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 'பில்லா', 'நண்பன்', 'துப்பாக்கி'

2012ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம்.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஏராளமானோர் சினிமா என்ற வார்த்தையை கூகுள் தேடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய நகரங்களான கோவை, சென்னை மற்றும் விஜயவாடாவில் தான் அதிகமானோர் சினிமா குறித்து கூகுளில் தேடியுள்ளனர்.
பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பல்வேறு பொருட்கள் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மகக்ள் படங்கள் குறித்து தான் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் விஜய் நடித்தது. பில்லா 2 அஜீத் குமார் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











