கொரோனாவின் அடுத்த பலி... பில்லா பாண்டி எழுத்தாளர் மரணம்... ஆர்கே சுரேஷ் உருக்கம்
சென்னை : கொரோனா தாக்கத்தில் திரைத்துறை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பல முக்கிய டைரக்டர்கள், நடிகர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இளம் வயதினரும் அடக்கம்.
இந்நிலையில் பில்லா பாண்டி படத்தின் எழுத்தாளர் கொரோனா பாதிப்பால் தற்போது உயிரிழந்துள்ளது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தீவிரமான இரண்டாவது அலை
கொரோனாவின் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே தற்போது இரண்டாவது அலை தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டாலும் தற்போது உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

அதிகமான உயிரிழப்புகள்
முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள் இந்த இரண்டாவது அலையில் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். முக்கிய இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர். தினந்தோறும் காலையில் எழுந்ததும் எந்த செய்தி வருமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.

எம்எம்எஸ் மூர்த்தி பலி
இந்நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷின் நடிப்பில் வெளிவந்த பில்லா பாண்டி படத்தின் எழுத்தாளர் எம்எம்எஸ் மூர்த்தி கொரோனா பாதிப்பில் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மிஸ் யூ மாமா என உருக்கம்
இந்நிலையில் அவரது உயிரிழப்பிற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள நடிகர் ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மிஸ் யூ மாமா என்று தெரிவித்துள்ள அவர், அழுகைக்கான எமோஜியையும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











