பீம்லா நாயக் 4வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : ராணா மற்றும் பவன் கூட்டணியில் தற்போது தாறுமாறாக உருவாகி வருகிறது பீம்லா நாயக் திரைப்படம்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் சந்திரா சாகர் இயக்கி வருகிறார்.

தெலுங்கில் இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்க பீம்லா நாயக் படத்திலிருந்து 4வது சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐயப்பன் கோஷியும்

ஐயப்பன் கோஷியும்

சமீபகாலமாகவே மலையாளத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் மற்ற மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஐயப்பன் கோஷியும் என்ற திரைப்படத்தை இயக்குனர் சாசி இயக்கி இருந்தார். பிரித்விராஜ் மற்றும் பிஜுமேனன் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தனர்

ஈகோவாக மாறி

ஈகோவாக மாறி

பிரித்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், பிஜு மேனன் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் இருவரும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இருவேறு ஆதிக்க துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்குள் ஏற்படும் மோதல் பின் ஈகோவாக மாறி அது எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பது பற்றியே இந்த திரைப்படம் அமைந்தது.

இருவேறு ஆதிக்க துறையில் பணிபுரியும்

இருவேறு ஆதிக்க துறையில் பணிபுரியும்

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழில் ரீமேக் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தெலுங்கில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் ராணா லீட் ரோலில் நடிக்க இயக்குனர் சந்திரா சாகர் இப்படத்தை இயக்குகிறார். பிரபல முன்னணி இயக்குனர் திரிவிக்ரம் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வருகிறார். சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

தமன் இசையில்

தமன் இசையில்

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பவன் கல்யாண் பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்திலும், ராணா பிரித்விராஜ் நடித்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வேடத்திலும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பீம்லா நாயக் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தமன் இசையில் இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் 4வது சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அடவி தல்லி மாட

அடவி தல்லி மாட

அதன்படி பீம்லா நாயக் 4வது சிங்கிள் "அடவி தல்லி மாட" டிசம்பர் 4ம் தேதி காலை 10.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷனுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகிவரும் பீம்லா நாயக் திரைப்படம் வரும் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X