»   »  வந்ததும் வராததுமா காயத்ரியையே செம கடுப்பேத்திய பிந்து மாதவி

வந்ததும் வராததுமா காயத்ரியையே செம கடுப்பேத்திய பிந்து மாதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்துள்ள பிந்து மாதவி காயத்ரியையே கடுப்பேற்றுகிறார். வழக்கமாக அந்த வேலையை காயத்ரி தான் செய்வார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுது பார்த்தாலும் சண்டை, கண்ணீர் என்று ஒரே நெகட்டிவிட்டியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழுடன் ஒப்பிடும்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நன்றாக உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில் தான் புதிய போட்டியாளராக பிந்து மாதவியை அழைத்து வந்துள்ளனர்.

பிந்து

பிந்து

பிக் பாஸ் வீடு பற்றி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இத்தனை நாட்கள் வெளியில் இருந்த பிந்துவுக்கு நன்றாகத் தெரியும். பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே காயத்ரியை நாமினேட் செய்துவிட்டார் பிந்து.

பரணி

பரணி சுவர் ஏறிக் குதிக்க முயன்றபோது ஏன் யாரும் அவரை தடுக்க முயற்சி செய்யவில்லை என்று பிந்து மாதவி காயத்ரியை கேள்வி கேட்க அவரோ சமாளிக்கிறார்.

தலைவர்

தலைவர்

நீங்கள் அனைவரும் பரணியை டார்கெட் செய்ததால் தான் அவர் தப்பியோட முயன்றார். யார் அந்த நேரத்தில் தலைவர் என்று கேட்ட பிந்துவிடம் நான் தான் என்கிறார் காயத்ரி.

காயத்ரி

காயத்ரி

தலைவராக இருந்த நீங்கள் அவரை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று பிந்து கூற காயத்ரியோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவரை பார்த்து முறைக்கிறார்.

English summary
Bindhu Madhavi is irritating Gayathri Raghuram by asking so many questions about the earlier happenings in the Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil