பேரிக்காய் தோட்டத்தில் புகுந்து வேட்டையாடிய நடிகை பிந்துமாதவி!

சென்னை : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட இயக்குனரின் யாருக்கும் அஞ்சேல் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார் நடிகை பிந்து மாதவி.

சசிகுமாருக்கு ஜோடியாக பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக பிந்துமாதவி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பேரிக்காய் தோட்டத்தில் புகுந்து பேரி காய்களை வேட்டையாடிய செம க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மார்க்கெட்டை உயர்த்தியது

மார்க்கெட்டை உயர்த்தியது

தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து திருப்தி படத்தில் வரும் நடிகை பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமாக உள்ளவர். பொக்கிஷம், வெப்பம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இவர் நடித்த கழுகு மிகப்பெரிய வெற்றி பெற்று இவரது மார்க்கெட்டை உயர்த்தியது. இப்பொழுது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார்.

யாருக்கும் அஞ்சேல் போஸ்டர்

யாருக்கும் அஞ்சேல் போஸ்டர்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் பிந்து மாதவி நடிக்கிறார். யாருக்கும் அஞ்சேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தக்கரைகளுடன் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

சசிகுமாருக்கு ஜோடியாக

சசிகுமாருக்கு ஜோடியாக


நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக பகைவனுக்கு அருள்வாய் படத்தில் பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இரண்டு கதாநாயகிகள் கொண்ட படம் என்பதால் இதில் வாணி போஜன் மற்றுமொரு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மரத்திலிருந்து பரித்து

மரத்திலிருந்து பரித்து

தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களால் சமூக வலைதளத்தை பந்தாடும் பிந்து மாதவி இப்பொழுது பேரிக்காய் தோட்டத்தில் புகுந்து பேரிக்காய்களை வேட்டையாடி சாப்பிட்டுள்ளார். பிங்க் கலர் குளிர் ஜாக்கெட்டில் குளிர் குல்லா போட்டுக் கொண்டு பேரிக்காய்யை மரத்திலிருந்து பரித்து சாப்பிட்டவாறு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X