twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங்க்கு போகாம கொல்லைப்புறத்துல என்ன பண்றீங்க பிந்துமாதவி!

    |

    சென்னை : நடிகை பிந்து மாதவி இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் யாருக்கும் அஞ்சேல் கதையில் லீட் ரோலில் நடித்துவருகிறார்.

    சசிகுமாரின் நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக பிந்துமாதவி ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

    ஆர்ஆர்ஆர் அப்டேட்…போராளியாக அஜய் தேவ்கன்... மோஷன் போஸ்டர் ரிலீஸ்!ஆர்ஆர்ஆர் அப்டேட்…போராளியாக அஜய் தேவ்கன்... மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

    ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறுசிறு சுட்டித்தனமான வேலைகளை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிந்துமாதவி இப்போது யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டு சாவகாசமாக போட்டோஷூட் செய்துள்ளார்.

    யாருக்கும் அஞ்சேல்

    யாருக்கும் அஞ்சேல்

    நடிகை பிந்து மாதவியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அளவான கவர்ச்சி நேர்த்தியான நடிப்பு என தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் யாருக்கும் அஞ்சேல் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

    நடிகர் சசிகுமார் நடிக்கும்

    நடிகர் சசிகுமார் நடிக்கும்

    சமீப காலமாகவே இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகள் நடிக்கும் திரைப்படங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இரண்டு கதாநாயகிகள் அதில் ஒருவராக நடிகை பிந்து மாதவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மற்றொருவர் நடிகை வாணி போஜன்.

    சேட்டைகளை செய்து

    சேட்டைகளை செய்து

    சில நடிகைகள் மட்டுமே திரைப்படங்களில் பார்ப்பதைப் போலவே நிஜத்திலும் சுட்டித்தனமான பல சேட்டைகளை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் நடிகை பிந்து மாதவியும் இதுபோல பல சேட்டைகளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

    கண்ணைக் கவரும் குட்டி பாவாடை

    கண்ணைக் கவரும் குட்டி பாவாடை

    அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லாமல் படக்குழுவுக்கு டேக்கா கொடுத்து வீட்டு கொல்லைப்புறத்தில் யாருக்கும் தெரியாமல் ஜிகு ஜிகு உடையில் கண்ணைக் கவரும் குட்டி பாவாடையுடன் நிறுத்தி நிதானமாக போட்டோ ஷூட் நடத்தி உள்ளதோடு அதை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார்.

    English summary
    Actress Bindhumadhavi is busy with Yarukkum Anjel movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X