நிச்சயத்தோடு நின்ற திருமணம்.. டேட்டிங் சென்ற நடிகை.. பகீர் முடிவெடுத்த திரிஷா!
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு 40 வயதான போதும், திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது, சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா. அதன் பின்,கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி, சிம்பு, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார். அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைப் படத்திலும், மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்

பயில்வான் ரங்கநாதன்: பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகை திரிஷாவிற்கு தற்போது 40 வயதாகிறது, இப்போதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். திருமணம் செய்து கொண்ட எத்தனை நடிகர், நடிகைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள். திருமணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்று, மன அழுத்தத்தில் இருப்பதற்கு திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடுகிறேன், என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார் திரிஷா.
அந்த நடிகைதான் காரணம்: நடிகை திரிஷாவிற்கு 20 வருடத்திற்கு முன் அதாவது 2015ம் ஆண்டு, வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருடன் டேட்டிங் எல்லாம் சென்று வந்தார். அப்போது, தான், வருணுக்கு நடிகை பிந்து மாதவியுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது திரிஷாவிற்கு தெரிந்ததை அடுத்து, இவர்களின் திருமணம் நின்று விட்டது. இதுகுறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிந்து மாதவியிடம் கேட்ட போது, திரிஷா, வருண் திருமணம் நின்ற பிறகுதான், நான் வருணுடன் பழகினேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டார் நடிகை பிந்து மாதவி.


Click it and Unblock the Notifications










