twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு -தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

    |

    கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். இவர் 5 முறை தமிழகத்தின் முதலமைச்சாராக இருந்திருக்கிறார் . கருணாநிதி அவர்கள் 7 அக்டோபர் 2018ல் உயிர் துறந்தார்.இவர் இறப்பதற்கு முன்பு 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வந்தானர். அதில் மொத்தம் 6 பாகங்கள் வரை வெளியாகி இருக்கின்றன. அதை மையமாக வைத்து தற்போது அவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

    கலைஞர் கருணாநிதி அவர்கள் 3 ஜீன் 1924 திருக்குவலை எனும் ஊரில் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் பல விடுதலை போரட்டங்களையும் செய்துள்ளார். மேலும் இவர் சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளர்,பாடலாசிரியர் போன்ற பல பணிகளை செய்துள்ளார் . தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் ஈர்ப்பால் அரசியலலில் நுழைந்தார். இவர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார் . இவர் தமிழகத்துக்கு செய்த போராட்டங்கள் பல. இவருக்கு பத்மாவதி , தயாளு அம்மாள், ராஜாத்தி என மூன்று மனைவிகள் இருக்கிறார்கள்.

    Biography of Kalaingar Karunanidhi is to be telecasted in television

    தற்போது தமிழ்நாடு கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவிலே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் இவரின் பல திட்டங்கள் தான் .இவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணிகள் எல்லாம் ஏராளம். இவர் தமிழ் மொழியில் பல இலக்கணம் மற்றும் இலக்கியங்களை இயற்றியுள்ளார்.

    Biography of Kalaingar Karunanidhi is to be telecasted in television

    கலைஞர் கருணாநிதி எப்படி சிறுவயதில் இருந்து கடிண உழைப்பின் காரணமாக படிபடியாய் முன்னேறி சினிமா மற்றும் அரசியலில் எவ்வாறு முன்னெறினார் அதில் எவ்வாறு அசைக்க முடிமா கலைஞராய் மாறினார், அவர் கடந்து வந்த பாதையில் எந்த விதமான பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தார் என்பதை அவரின் வாழ்க்கை வரலாறாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிப்பரப்ப உள்ளனர். அதற்கான விளம்பரங்கள் தற்போது கலைஞர் தொலைக்காட்சி ,இசையருவி,சித்திரம் ஆகிய தொலைகாட்சிகள் மற்றும் இனையம் மூலம் விளம்பரங்களை ஒளிப்பரப்பி வருகின்றனர். வரும் வாரம் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 முதல் 10 வரை ஒளிப்பரப்பாக உள்ளது கலைஞர் வரலாறு.

    Biography of Kalaingar Karunanidhi is to be telecasted in television

    இவர் ஒரு மாக வித்தகர், உண்மையான கலைஞர், நாட்டின் வளர்ச்சி மீதும் கலையின் மீதும் மிகுந்த அரவம் அக்கறை உள்ளவர். அந்த தூய தமிழனின் வாழ்கை வரலாறு நிச்சயம் பல பேருக்கு போதி மரமாக அமையும். அதன் மூலம் பலருக்கும் ஞானம் பிறக்கும். தவறாமல் இந்த தொடரை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு ரசிக்கவேண்டும். அவர் வாழ்ந்த இந்த நூற்றாண்டில் நாமமும் வாழ்ந்தோம் என்பதில் தமிழனாய் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

    "உங்கள சும்மா விடமாட்டேன்"- கொந்தளிக்கும் கோபத்தோடு மீரா மிதுன்

    English summary
    Former Chief Minister of Tamil Nadu kalaingar Karunanidhi biography is to be telecasted as series in kalaingar news television on saturdays and sundays from 9.30 pm -10.00 pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X