twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசத்தை உயத்திய ஒரு பெண்ணின்.. பிரபல வீராங்கனையின் பயோபிக்..அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

    By
    |

    சென்னை: பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை கதை சினிமாவாக உருவாக்கப்படுவது பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது சினிமாவில் அதிகரித்து வருகிறது.

    சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகளை சினிமாவாக எடுக்க தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

    சிக்கென்ற இடையழகி.. கன்னக்குழியழகி சாரதா தாஸ்..புடவையில் கவர்ச்சி போஸ்!சிக்கென்ற இடையழகி.. கன்னக்குழியழகி சாரதா தாஸ்..புடவையில் கவர்ச்சி போஸ்!

    வரவேற்பைப் பெற்றன

    வரவேற்பைப் பெற்றன

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாவானது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்போது, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது.

    மிதாலி ராஜ்

    மிதாலி ராஜ்

    பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதையை, நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். அவர், பயிற்சியாளராகவும் நடிக்கிறார். இதே போல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சபாஷ் மித்து என்று டைட்டில் வைத்துள்ளனர்..

    கர்ணம் மல்லேஸ்வரி

    கர்ணம் மல்லேஸ்வரி

    இந்நிலையில், பிரபல வெயிட்லிப்ஃடிங் வீராங்கனை, கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. ஆந்திராவை சேர்ந்த மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் அதுதான்.

    எம்.வி.வி சினிமா

    எம்.வி.வி சினிமா

    பிரபல தெலுங்கு டைரட்டரும் தயாரிப்பாளருமான கோனா வெங்கட், இதற்கான உரிமையை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் படம் உருவாகிறது. எம்.வி.வி சினிமா சார்பில் எம்.வி.வி.சத்யநாராயணா தயாரிக்கிறார். சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர், ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர்.

    மல்லேஸ்வரியாக யார்?

    மல்லேஸ்வரியாக யார்?

    கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இன்று அதை அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. கேப்ஷனாக, 'தேசத்தைய உயர்த்திய ஒரு பெண்ணின் பயணம்' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கர்ணம் மல்லேஸ்வரி கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.

    English summary
    Biopic on weightlifter Karnam Malleswari announced today at her birthday under Sanjana Reddy's direction
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X