Bipasha Basu: அடக்கடவுளே.. பிபாஷா பாசு குழந்தைக்கு இதயத்தில் 2 ஓட்டைகள்.. சோகத்தில் குடும்பம்!
மும்பை: 43 வயதில் தனது முதல் குழந்தையை நடிகை பிபாஷா பாசு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெற்றெடுத்த நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி இருந்தனர்.
ஆனால், குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு கூடவே அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் காத்திருந்தது.

தனது பெண் குழந்தைக்கு தேவி என அம்மனின் பெயரை வைத்து வளர்த்து வந்த பிபாஷா பாசு அந்த குழந்தைக்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
சச்சின் பட நடிகை: தூம் 2 உள்ளிட்ட பல பிரபல பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிபாஷா பாசு நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் இன்னொரு ஹீரோயின் போல சில காட்சிகள் மற்றும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி விட்டு சென்றிருப்பார்.
இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த பிபாஷா பாசு கடந்த 2016ம் ஆண்டு கரண் சிங் க்ரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
43 வயதில் அம்மாவான பிபாஷா பாசு: 2016ம் ஆண்டு திருமணம் ஆனாலும், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தான் பிபாஷா பாசு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தேவி என தனது மகளுக்கு பெயரிட்டதை சந்தோஷமாக அறிவித்த பிபாஷா பாசுவுக்கு கொஞ்ச நாட்கள் கூட அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை.
குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலம் முடியாமல் போக, மருத்துவர்கள் குழந்தை பிறக்கும் போதே இதயத்தில் இரண்டு ஓட்டைகளுடன் பிறந்துள்ளது என்றும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுத்து வருகின்றனர்.

எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது: கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவமனைக்கு சென்று குழந்தைக்கான சிகிச்சையிலேயே மொத்த நேரத்தையும் செலவழித்து வரும் நடிகை பிபாஷா பாசு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த தகவலை சொல்லி அழுது விட்டார்.
எந்த தாய்க்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது என பிபாஷா பாசு உருகியதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களிலேயே அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டுமென்று சொன்னால் எப்படி இருக்கும்.
என் கணவர் அதற்கு தயாராகவே இல்லை. ஆனால், குழந்தையை காப்பாற்ற அதைத் தவிர வேறு வழியில்லை என மருத்துவர்கள் சொன்ன நிலையில், 3 மாதத்தில் இதய அறுவை சிகிச்சையை நடத்தினோம். மருத்துவர்களின் உதவியால் இப்போ என் மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என பிபாஷா பாசு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











