பிபாஷா பாசு- கரண் சிங் குரோவர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..குவியும் வாழ்த்து!
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தாயானார் அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
43 வயதான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்க தயாராகியுள்ள நிலையில், அவ்வப்போது பிபாஷா பாசு கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

கனவுக்கன்னி
பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாஷா பாபு. க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்த பிபாஷா பாபு 2004ல் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

காதல் திருமணம்
பிபாஷா பாசு, கரண் சிங் குரோவருடன் அலோன் படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல் ஜோடியாக இருவரும் பல இடங்களில் சுற்றி வந்த நிலையில் 2016ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேபி பம்ப் போட்டோஷூட்
திருமணமாகி ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த பிபாஷா பாசு தாயான மகிழ்ச்சியான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அறிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கன் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து பேபி பம்ப் போட்டோஷூட் நடத்தி இணையத்தை திணறடித்தார்.

தாயானார்
இந்நிலையில், நடிகை பிபாஷா பாசுவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிபாஷா குழந்தை பிறப்பிற்கு முன்பாகவே Baby Onth away என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு, இனி நாங்கள் பெற்றோர்கள் என பகிர்ந்து இருந்தார். தற்போது, பிபாஷா பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளதால், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











