அரை நிர்வாணமாக பேபி பம்ப் போட்டோஷூட்... பிபாஷா பாசுவின் லேட்டஸ் போட்டோஸ்!

மும்பை : பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நிறைமாத வயிற்றை காட்டியபடி இணையவாசிகளை திணறடித்துள்ளார்.

43 வய

தான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்க தயாராகியுள்ள நிலையில், அவ்வப்போது பிபாஷா பாசு கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

பிபாஷா பாபு

பிபாஷா பாபு

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாஷா பாபு. க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்த பிபாஷா பாபு 2004ல் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவரை அலோன் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, பெங்காலி முறைப்படி 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முதல் குழந்தை

முதல் குழந்தை

இதையடுத்து, பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவரை தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அறிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உணர்ச்சி வசப்பட்டேன்

உணர்ச்சி வசப்பட்டேன்

சமீபத்தில், பிபாஷா பாசு அளித்துள்ள பேட்டியில், நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன், நானும் கரனும் என் அம்மாவின் வீட்டிற்கு ஓடினோம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை நான் சொல்ல விரும்பிய முதல் நபர் அவர்தான். எனக்கும் காரனுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.

கர்ப்பகால போட்டோஷூட்

கர்ப்பகால போட்டோஷூட்

இந்நிலையில், தங்க நிறத்தால் ஆன ஒரு துணியை மார்பில் மட்டும் கட்டிக்கொண்டு கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படத்தில், உன்னையும் நேசி, உன் உடலையும் நேசி என்கிற கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் ஆர்த்தி சிங், இதய எமோஜியுடன் கூடிய சிரித்த முகத்தை பதிவிட்டுள்ளார். பிபாஷாவின் ரசிகர்களில் ஒருவர், "அழகான அம்மா" என்று எழுதினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X