'பிரியாணி' இன்னும் ரெடியாகவில்லை: இசை வெளியீடு, ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு
சென்னை: பிரியாணி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழா தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிரியாணி. பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யுவன் பிறந்தநாள் அன்று
பிரியாணி இசை வெளியீட்டு விழா வரும் 31ம் தேதி அதாவது படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் அன்று நடைபெறுமாம்.

ரிலீஸும் லேட்
பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதாம்.

மதகஜராஜா
செப்டம்பர் 6ம் தேதி கார்த்தியின் பிரியாணியும், விஷாலின் மதகஜராஜாவும் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரியாணி பின்வாங்கியுள்ளதால் மதகஜராஜா தனியாக வருகிறார்.

டச் அப்
பிரியாணி பட வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லையாம். படத்தை மேம்படுத்தும் வேலையில் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











