தீபாவளிக்கு டிரெய்லர், பொங்கலுக்கு பிரியாணி படம் ரிலீஸ்
சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அந்த படத்துடன் பிரியாணி படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறார்கள்.
கார்த்தி ராஜேஷ் இயக்கத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்திலும் நடித்தார். பிரியாணி படம் ரம்ஜானுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் இழுத்துக் கொண்டு போனதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகைகள் முடிந்து தீபாவளியும் இதோ வந்துவிட்டது. ஆனால் பிரியாணி மட்டும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆல் இன் ஆல் அழகுராஜா
பிரியாணி ரிலீஸ் தேதியை முடிவு செய்வது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தபோது கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

சரவெடி
ஆல் இன் ஆல் அழகுராஜா சரவெடியாய் வெடித்து கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாணி டிரெய்லர்
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துடன் 2 நிமிடங்கள் ஓடும் பிரியாணி டிரெய்லரை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். பிரியாணி படத்தின் இசை மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

பொங்கலுக்கு
பிரியாணி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் விரும்பினார்கள். இதையடுத்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











