38 வயசாகிடுச்சு.. பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கத்ரீனா கைஃப்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
ஜூலை 16ம் தேதியான நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார் இந்த பாலிவுட் உலகின் கவர்ச்சிக் கன்னி.
சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் கத்ரீனா கைஃபை வாழ்த்தி உள்ளனர்.

38 வயசாகிடுச்சு
ஹாங்காங்கில் பிறந்து லண்டனில் வளர்ந்த கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் நடிகையாக செட்டில் ஆகி பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். 2003ம் ஆண்டு வெளியான அமிதாப் பச்சனின் பூம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கத்ரீனா கைஃப் நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சல்மான் கான் வாழ்த்து
நடிகை கத்ரீனா கைஃப்புக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் கத்ரீனா கைஃபுக்கு வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்தினார். பாலிவுட்டின் சிறந்த ஜோடி இவர்கள் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

பிகினியில் நன்றி
தனது 38வது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் செம குளிர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி பர்த்டே ட்ரீட் கொடுத்துள்ளார்.

கான்களுடன்
2017ல் சல்மான் கானின் டைகர் ஜிந்தகி, 2018ல் ஷாருக்கானின் ஜீரோ மற்றும் அமீர்கானுடன் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், 2019ல் மீண்டும் சல்மான் கானுடன் பாரத் என தொடர்ந்து கான் நடிகர்களுடன் தான் தற்போது ஜோடி போட்டு நடித்து வருகிறார் கத்ரீனா கைஃப்.

கைவசம்
கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி படத்திற்காக ரொம்ப நாளாகவே காத்திருக்கிறார் கத்ரீனா கைஃப். அடுத்ததாக போன் பூத் மற்றும் சல்மான் கான் உடன் டைகர் 3 உள்ளிட்ட படங்கள் கத்ரீனா கைஃப் கைவசம் உள்ளன.


Click it and Unblock the Notifications











