Sunny Leone Net Worth: சன்னி லியோனுக்கு ஹேப்பி பர்த்டே.. முன்னாள் ஆபாச நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா?

மும்பை: முன்னாள் ஆபாச நடிகையும் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

1981ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்த கரஞ்சித் கவுர் ஆபாச நடிகையாக மாறும் முடிவை எடுத்த நிலையில், சன்னி லியோனாக உருவெடுத்தார்.

தனது இளமை காலம் முழுவதும் ஆபாச நடிகையாக நடித்த சன்னி லியோன் உலகளவில் அப்போதே ஃபேமஸ் ஆகி இருந்தார். பல ஆண்டுகள் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நடிகை சன்னி லியோனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம் வாங்க..

Birthday Girl Sunny Leones Net worth and assets details are here

42 வயதிலும் ஹாட் பியூட்டி: ஆபாச நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் தனது காமத்தால் கவர்ந்திழுத்த சன்னி லியோன் அந்த தொழிலே வேண்டாம் என ஒரு கட்டத்தில் முடிவு செய்து விட்டு பாலிவுட்டில் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பின்னர் 2012ல் ஜிஸ்ம் 2 படத்தில் கவர்ச்சி நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஏகப்பட்ட பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு கடும் போட்டியாக சன்னி லியோன் மாறிய நிலையில், பாலிவுட் படங்களை கடந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

Birthday Girl Sunny Leones Net worth and assets details are here

கோலிவுட்டில் அறிமுகமான கவர்ச்சி கோஸ்ட்: 2014ம் ஆண்டு நாடு முழுவதும் சன்னி லியோன் அலை அடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை சன்னி லியோனை ஆட வைத்திருந்தனர்.

அதன் பின்னர் தமிழில் வீரம்மா தேவி படத்தில் நடித்து வந்தார் சன்னி லியோன். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சி கோஸ்ட்டாக வந்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் சன்னி லியோன். ஷீரோ எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

Birthday Girl Sunny Leones Net worth and assets details are here

சொத்து மதிப்பு: நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் ஒரு பிரம்மாண்ட வீடு உள்ளது. ஆனால், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தான் வசித்து வருகிறார். 19 கோடி ரூபாய் மதிப்புள்ள மேன்சனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

டேனியல் வெப்பரை திருமணம் செய்துக் கொண்ட சன்னி லியோன் நிஷா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், வாடகைத்தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.

ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் சன்னி லியோனிடம் 98 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Birthday Girl Sunny Leones Net worth and assets details are here

குவியும் வாழ்த்து: நடிகை சன்னி லியோன் 42 வயதானாலும் இன்னமும் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களை பகிர்ந்து இணைய வாசிகளுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், #SunnyLeone ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X