Ramarajan: ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய ராமராஜன்..பிறந்த நாள் ஸ்பெஷல் ஸ்டோரி!

சென்னை: நடிகர் ராமராஜன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இணையத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது.

உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்த இவர் பிறகு இயக்குனராக மாறி பின் முழுநேர நடிகரானவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

Birthday special story of Ramarajan who earned highest salary than Rajini and Kamal

ராமராஜன் பிறந்தநாள்: ராமராஜன் சிறந்த நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம். அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம்... ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்டன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஹிட் படங்கள்: கரகாட்டக்காரன் திரைப்படம் போல, எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு, பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்கள் இவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. சினிமாவிற்கு நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஒரு கோடி சம்பளம்: ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ராமராஜன் காலத்தில்தான் முதல் முறையாக நடந்தது. அந்த சாதனைக்குரியவர் ராமராஜன்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் கூட அப்போது அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. ராமராஜன் படங்கள் அன்று மிகப் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்தன. குறிப்பாக கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள்தான் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலில் சாதனை படைத்தன. இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் நிகழ்த்தவில்லை.

Birthday special story of Ramarajan who earned highest salary than Rajini and Kamal

காதல் மனைவி நளினி: படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ராமராஜன், நளினியுடன் மனசுக்கேத்த மகராசா, காவலன் ஆகிய படங்களில் நடித்த போது காதல் வயப்பட்டனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X