twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினின்னா மாஸ்.. ரஜினியின் 5 சூப்பர் டூப்பர் "ஹிட்" லிஸ்ட்!

    |

    சென்னை: ரஜினி படங்களின் வசூலை சாதாரணமாக சொல்லி விட முடியாது. எல்லாமே மாஸ் வசூல்தான். அந்த வகையில் லிங்காவும் இணையும் என்று ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

    இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் மாஸ் ஹிட் சூப்பர் டூப்பர் வசூல் படங்களின் ஐந்தை மட்டும் இங்கு பார்க்கலாம்.

    அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த ரஜினியின் திரையுலக பயணத்தில் ஹிட்டுகள்தான் அதிகம். அந்த வகையில் இந்த ஐந்து படங்களும் ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய மாஸ் ஹிட் படங்களாக அமைந்தவையாகும்.

    எந்திரன்:

    எந்திரன்:

    ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ரஜினி நடித்த எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பிய படம் இது. ஷங்கர் இயக்கிய இப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதாவது இந்தியாவில் மட்டும் இது 190 கோடி வரை வசூலித்தது. உலகெங்கும் 12 மில்லியன் டாலரை வசூலித்தது. மொத்த வருவாய் ரூ. 260 கோடி என்று கூறப்படுகிறது.

    சிவாஜி தி பாஸ்:

    சிவாஜி தி பாஸ்:

    இதுவும் ஷங்கரின் படம். 2007ம் ஆண்டு வெளியான இபப்டம் ரூ. 130 கோடியை வசூலித்ததாக கூறுவார்கள். இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியை முற்றிலும் இளமைத் தோற்றத்தில் காண முடிந்தது ரசிகர்களால். அதிலும் அந்த மொட்டை பாஸ் கேரக்டர் அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.

    சந்திரமுகி:

    சந்திரமுகி:

    மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரத்தாழு படத்தின் ரீமேக் இது. ஆனால் இது போட்ட போடு திரையுலகையே அதிர வைத்தது. 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி ரூ. 65 கோடிக்கு மேல் வசூலித்தது. பாட்டும் சரி, ரஜினி, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பும் சரி பட்டையைக் கிளப்பின. அதிலும் அநத் வேட்டைய ராஜா கேரக்டர் பிரமாதப்படுத்தியது.

    படையப்பா:

    படையப்பா:

    1999ம் ஆண்டு வெளியான படையப்பா, ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ரம்யா கிருஷ்ணனின் வில்லி வேடம் வசூகரித்தது. மிகப் பெரிய ஹிட்டான இது பாக்ஸ் ஆபீஸில் ரூ. 30 கோடியைத் தாண்டி வசூலித்தது.

    பாட்ஷா:

    பாட்ஷா:

    1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மெகா ஹிட் படம். மாணிக் பாட்ஷாவாக ரஜினி பட்டையைக் கிளப்பியிருந்தார். இப்படம் ரூ. 25 கோடியைத் தாண்டி வசூலித்தது. இன்று வரை ரஜினியின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    English summary
    As Superstar Rajinikanth celebrates his 64th birthday today we look at some of the biggest successes in his 40-year career. He started his exciting career with Apoorva Rangangal in 1975 and today his biggest release ever, Lingaa, is set to hit screens worldwide. Rajinikanth’s milestones are like no other actor’s – he went from bus conductor to actor, villain to hero, and today, the highest paid actor in India with allegedly a salary of Rs 60 crore for Lingaa!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X