twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநகரம் டு மாஸ்டர்.. விறுவிறுவென வளரும் லோகேஷ் கனகராஜ்.. எல்லாம் எப்படி சாத்தியமானது?

    |

    சென்னை: மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 34வது பிறந்த நாளை தளபதி ரசிகர்கள் வேற லெவலில் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

    Recommended Video

    Master Lokesh Kanagaraj 34th Birthday | Master Audio Launch

    தனது திறமையை மட்டும் நம்பி, பெரிய நட்சத்திரங்கள் இன்றி, மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விறுவிறுப்பான ஸ்க்ரீன் பிளேவால் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

    கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    அடுத்து தளபதி விஜய்யின் மாஸ்டர் சரவெடிக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

    செம ஸ்பீடு

    செம ஸ்பீடு

    துடிப்பான இளைஞராக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வேகமும், விவேகமும் கலந்து செயல்படுவதே, அவரது படங்கள் வெற்றியடைய காரணம். சந்திப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சார்லியை நடிப்பில் உருவான மாநகரம் படம் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றதற்கு முழு காரணமும் லோகேஷ் கனகராஜ் போட்ட எஃபோர்ட் தான்.

    நைட் ஷூட்டிங்

    நைட் ஷூட்டிங்

    இரவில் படமெடுப்பது என்றால் லோகேஷ் கனகராஜுக்கு அவ்வளவு பிடிக்கும் போல, மாநகரம் படத்தின் பல காட்சிகள் இரவு காட்சிகளாக அமைந்த நிலையில், கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடப்பது போன்ற வித்தியாசமான திரைக்கதையை அமைத்து தனது பரிசோதனை முயற்சியிலும் வெற்றி பெற்றார்.

    5 இயக்குநர்களுடன்

    5 இயக்குநர்களுடன்

    மாநகரம் படத்திற்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான அவியல் படத்திற்கு 5 இயக்குநர்கள் பணியாற்றினர். அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோகித் மெஹ்ரா, குரு சாமரன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜும் அந்த படத்தை இயக்கினார். லோகேஷ் கனகராஜின் களம் குறும்படமும் அந்த அவியலில் இணைந்திருந்தது.

    கமல் ரசிகர்

    கமல் ரசிகர்

    பாடல்கள் இன்றி, ஹீரோயின் இன்றி இப்படி வித்தியாச வித்தியாசமான முயற்சிகளை பிலிம் மேக்கிங்கில் பண்ண வேண்டும் என்ற பரிசோதனை முயற்சிகளை லோகேஷ் கனகராஜ் செய்ய ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருக்கும் லோகேஷ், இவ்வாறு புதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

    பிறந்தநாள் பரிசு

    பிறந்தநாள் பரிசு

    மாநகரம் படத்தில் ஆரம்பித்து, கைதி படத்தில் கவனம் ஈர்த்து, மாஸ்டர் படத்திற்காக இந்திய சினிமாவையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் என நட்சத்திர பட்டாளத்துடன் வாத்தி கம்மிங் ஆகப் போகிறார். பிறந்த நாள் பரிசாக நாளை மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது.

    ரஜினியை இயக்குகிறாரா?

    ரஜினியை இயக்குகிறாரா?

    தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கப் போகும், அடுத்த படத்தை இயக்குவார் என்கிற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கு இருக்கும் திறமைக்கு நிச்சயம் அந்த மணிமகுடமும் அவர் சிரசை சீக்கிரமே அலங்கரிக்கும்!

    English summary
    Master Director Lokesh Kanagaraj turns 34 today. Thalapathy Vijay fans create several hashtag and trends Lokesh Birthday in social media. Tomorrow fans expecting a huge audio launch.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X