பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

சென்னை : சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலகலப்பான காமெடியுடன் வெளியான பிஸ்கோத் திரைப்படம் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஜீ பிளக்ஸில் பேஜ் பெர் வியூ என்ற கணக்கில் வெளியிடப்பட்ட நிலையில் இப்பொழுது பிஸ்கோத் வெளியாக உள்ளது.

டிசம்பர் 4 முதல் ஜீ நெட்வொர்க் நிறுவனத்தின் ஜீ பிளக்ஸ் தளத்தில் பிஸ்கோத் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

காமெடி நடிகராக

காமெடி நடிகராக

தொடர் காமெடி திரைப்படங்களில் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கிட்ட தட்ட பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்த சந்தானம் பலமுறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகளைப் பெற்றதோடு "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார்.

முக்கியமான நடிகர்

முக்கியமான நடிகர்

அதைத்தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது கோலிவுட்டில் மிக பிஸியாக வலம் வரும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக சந்தானம் இருக்கிறார் .

மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

தில்லுக்குதுட்டு, டகால்டி, ஏ1, இனிமே இப்படித்தான், சக்க போடு போடு ராஜா போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான "பிஸ்கோத்" திரைப்படம் கொரானா லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஏ1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் இணைந்து "பாரிஸ் ஜெயராஜ் " திரைப்படத்தில் நடிக்க உள்ள சந்தானம் நேற்று அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

Recommended Video

OTT தளத்தை எந்த சினிமாக்காரனும் விரும்ப மாட்டான் | ACTOR SANTHANAM | BISKOTH MOVIE | FILMIBEAT TAMIL
99 ரூபாய் கட்டணம்

99 ரூபாய் கட்டணம்

காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் மற்றும் 90களில் வலம்வந்த ஹீரோக்களின் கெட்டப் என சந்தானம் செம அட்ராசிட்டி செய்திருக்க பிஸ்கோத் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிரபல ஒடிடி நிறுவனமான ஜீ நெட்வொர்க் நிறுவனத்தின் ஜீ பிளக்ஸ் தளத்தில் பிஸ்கோத் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பேஜ் பெர் வியூ என்ற கணக்கில் 99 ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்தி கண்டு மகிழலாம் என நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X