Nayanthara: மூன்று குரங்குகள்.. நயன்தாரா பாடி ஷேமிங் செய்தது நியாயமா.. அந்தணன் கேள்வி!
சென்னை: பிஸ்மி உள்ளிட்டவர்கள் தங்களது வலைப்பேச்சு நிகழ்ச்சியில் 50க்கு 45 எபிசோட்களில் தன்னைப்பபற்றி தான் அதிகமாக பேசுவதாகவும் அவர்களுக்கு இதன் மூலம் வியூஸ்கள் கிடைப்பதால் அதிகமாக பணம் சம்பாதிப்பதாகவும் நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நயன்தாரா குறித்து மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு செய்திகள் மட்டுமே தாங்கள் பகிர்ந்துள்ளதாகவும் அதுவும் அவரது படங்கள், தயாரிப்பு குறித்துதான் பகிர்ந்துள்ளதாகவும் ஆனால் நயன்தாரா மாற்றி குற்றம் சாட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.. மேலும் தான் பல பாடி ஷேமிங்குகளை எதிர்கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறும் நயன்தாரா, தங்கள் மூவரையும் பாடி ஷேமிங் செய்தது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளே கடந்து தமிழ், தெலுங்கு. மலையாளம். ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களது கூட்டணியில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. தொடர்ந்து நயன்தாரா ஹிந்தி படங்களில் நடிப்பார் என்று தெரிகிறது. அடுத்ததாக இவரது நடிப்பில் மண்ணாங்கட்டி, கவினுடன் ஒரு படம் என ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. நயன்தாரா தயாரிப்பில் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கி வரும் LIK படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: இவர்கள் இருவரும் இணைந்து படங்களை தயாரிப்பதுடன் அடுத்தடுத்த காஸ்மெட்டிக் பிசினஸ்களையும் துவங்கி நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நயன்தாராவின் ஃபேரீ டேல் ஆவணப்படம் வெளியான நிலையில் இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தையொட்டிய காட்சிகள், பேட்டிகள் காணப்பட்டன. இவர்கள் இருவரும் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் இணைந்த போதுதான் காதல் ஏற்பட்டது. இதனிடையே இந்த படத்தின் சில காட்சிகளை ஆவண படத்தில் இணைக்க தனுஷ் ஒப்புதல் கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
மூன்று குரங்குகள் என கமெண்ட்: மேலும் அவரது ஒப்புதல் இல்லாமல் சில காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதால் தொடர்ந்து நயன்தாராவின் அடுத்தடுத்த பிரச்சனைகளை மையமாக வைத்து வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அந்தணன், பிஸ்மி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 50 எபிசோட்களில் 45 தன்னை பற்றி தான் இருக்கிறது என்றும் நயன்தாரா தன்னுடைய பேட்டியில் புகார் தெரிவித்திருந்தார். அவர்கள் மூவரையும் மூன்று குரங்குகள் என்றும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
அந்தணன் கேள்வி: இந்நிலையில் இதுகுறித்து இன்றைய தினம் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பேசிய அந்தணன் உள்ளிட்டவர்கள், தான் பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் நிலையில் பல பாடி ஷேமிங்குகளை சந்தித்ததாக நயன்தாரா கூறுவதாகவும் ஆனால் அவர் தங்களை மூன்று குரங்குகள் என்று அடையாளப்படுத்தி பாடி ஷேமிங் செய்வது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தாங்கள் மாதத்தில் 30 நிகழ்ச்சிகளை கொடுத்தாலும் 2 -3 நிகழ்ச்சிகளில் மட்டுமே நயன்தாரா குறித்து பேசியதாகவும் ஆனால் நய்னதாரர் இவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு முகாந்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது எந்த வெறுப்பும் தங்களுக்கு இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











