லால் சலாம்.. கேப்டன் மில்லர்.. மோதிக்கொண்ட ஐஸ்வர்யா, தனுஷ்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: லால் சலாம், கேப்டன் மில்லர் ஒரே நேரத்தில் வெளியாவதால் இருவருக்கும் இடையே மோதல் முற்றிவருவதாக பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை என பிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியாகி படம் ஜனவரி 26 படம் தள்ளிப்போவதாகவும் சொல்லப்பட்டது.
பிஸ்மி: இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, கேப்டன் மில்லர் படம் வெளியாகும் போது அதற்கு போட்டியாக தனது படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள பிஸ்மி, ஐஸ்வர்யா தயாரித்த லால் சலாம் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தான் வெளியிட உள்ளது.
அதே பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அரண்மனை 4, அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அனைத்து படமும் பொங்கலுக்கு வெளியானால் அனைத்து படத்திற்கு தியேட்டரை ஒதுக்க வேண்டும்.
பொங்கலுக்கு வெளியாகும் படங்கள்: அரண்மனை 4 திரைப்படத்தை வேறு ஒரு தேதிக்கு வெளியிட பிளான் போட்டார்கள், ஆனால் அதற்கு சுந்தர் சி ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து லால் சலாம் படத்தை வேறு தேதியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். அதுவும் ஒர்க் அவுட் ஆகாததால், லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
உண்மை இல்லை: ஆனால், ஐஸ்வர்யாவுக்கும் தனுஷூக்கும் இருக்கும் பிரச்சனை காரணமாக தள்ளிப்போவதாக செய்தி பரவி வருகிறது. உண்மையில் அப்படி இல்லை. ஒரு படம் எப்போது வெளியாக வேண்டும் என்று தீர்மானிப்பது தயாரிப்பாளர்கள் தான். பொங்கலுக்கு தொடர் விடுமுறை என்பதால், படம் கணிசமான வசூலை பெற்றுவிடும் என்று தயாரிப்பாளர்கள் நினைப்பதால் தான் லால் சலாம் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகிறது. இணையத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் மோதிக் கொள்வதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











