'லைகா' இழுத்து மூடப்படுமா? எல்லாமே இந்தியன் 2வில் தான் இருக்கு.. பிஸ்மி சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: பல வெற்றிப்படங்களை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இருப்பதால், கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூட இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வரும் நிலையில், இதுகுறித்து பேசிய பிஸ்மி, எல்லாமே இந்தியன் 2வின் வெற்றியில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தயாரிப்பு நிறுவனமாக அடியெடுத்து வைத்தது லைகா. பல மிகப்பெரிய நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களை தயாரித்துள்ளது. இருந்தாலும் லைகா நிறுவனம் தமிழில் தான் அதிகப்படியான படங்களைத் தயாரித்துள்ளது.அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தில் தாமதத்தாலும், லைகா நிறுவனத்திற்கு தொடர்ந்து வந்த சிக்கலாலும், லைகா நிறுவனம் தனது படத்தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

LYCA Productions Bismi

பிஸ்மி பேட்டி: இதுகுறித்து பேசிய பிஸ்மி, அது இந்தியன் 2வின் வெற்றியில் தான் இருக்கிறது. ஆனால், இன்றைய கட்டத்தில் திரையுலகில் பேசப்படுவது என்னவென்றால், லைகாவை பொறுத்தவரைக்கும் பட தயாரிப்பை நிறுத்துகிறார்கள். தற்போது என்ன கையில் இருக்கிறதோ அதை எடுத்துமுடித்துவிட்டு தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாக ஒரு தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. மேலும், லைகா நிறுவனம் ஒரு யூடியூப் சேனலை வைத்து இருக்கிறது. அதை பெரிய அளவில் கொண்டு வந்து ஒரு சேனலாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை வைத்து இருப்பதாக ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 வெற்றியில்: அதே நேரம், இந்தியன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தால், இந்த முடிவில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால், இந்தியன் 2 படத்தை உலகம் முழுவதும் லைகா நிறுவனம் தான் ரிலீஸ் செய்கிறது. இதனால், படம் வந்த பிளாப் ஆனாலும், பெரிய அளவில் அவர்கள் கஷ்டப்படுவார்கள், ஹிட்டானாலும் அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அந்த அடிப்படையில் இந்தியன் 2 வெற்றி அடைந்தால், லைகாவின் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியன் 2: ஷங்கரின் பிரம்மாண்ட தயாரிப்பில் கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக தயாரித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் ஒரு வழியாக பல பிரச்சனைகளை கடந்து வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சென்னை, மும்பை, துபாய் என படு ஜோராக நடந்து முடிந்துள்ளது. 12 விதமான கெட்டப்பில் நடித்துள்ள கமல்ஹாசனை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X