ஜப்பான் படம் ஓடாதுனு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதற்கு காரணம் இதுதான்.. பிஸ்மி பேட்டி!
சென்னை: கார்த்திக் நடித்த ஜப்பான் படம் ஓடாதுனு எனக்கு முன்னாடியே தெரியும் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில், தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு கடந்த10ந் தேதி ஜப்பான் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி: கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வணிகரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் வன்னியத் தேவனாக கார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜப்பான்: கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தில் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை எடுக்கும் ராஜு முருகன் ஒரு கமர்சியல் படத்தை இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் ஏமாற்றம்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மோசமான திரைக்கதையால் முதல் நாளே தியேட்டரில் காத்துவாங்க தொடங்கியது. தீபாவளி விடுமுறை நாட்களில் மட்டும் ஓரளவு வசூல் ஈட்டும் என்று படக்குழு எதிர் பார்த்த நிலையில் படம் பார்க்க தியேட்டருக்கு ஆட்கள் வரவே இல்லை. பல ஊர்களில் இப்படத்தை தூக்கிவிட்டு லியோ, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை திரையிட்டனர்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் வலைபேச்சு பிஸ்மி ஐப்பான் படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ஜப்பான் படம் என்ற அறிவிப்பு வெளியான போது அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் ராஜு முருகன் ஏன் என்றால் அவர் ஏற்கனவே ஜோக்கர் என்ற படத்தை சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கி உள்ளார் என்பதால்.
படம் ஓடாதுனு முன்னாடியே தெரியும்: ஜப்பான் படத்திலும் கார்த்தியை வைத்து ஒரு சமூக அக்கறை கதையை பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், அதன் பிறகு படம்குறித்து வந்த டீசர், பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு அந்த படத்தின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. நகைக்கடையில் கொள்ளை அடிக்கும் நபராக கார்த்திநடித்து இருக்கிறார் என்ற தகவல்கள் வர அந்த படம் ஓடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











